உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக..

இன்று இனிதாக..

ஆன்மிகம்ஆடிப்பூரம் 'திரு ஆடிப்பூரம்' விழாவை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. நேரம்: காலை 7:00 மணி: விசேஷ அபிஷேகம், அலங்காரம்; ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாளுக்கு சீமந்த வளைகாப்பு உற்சவம்; 10:30 மணி முதல் 11:30 மணி வரை: ரஜனி குழுவினரின் வீணை இசை; 11:30 மணிக்கு மேல் சிறப்பு பூஜை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். நேரம்: காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை: ஆண்டாளுக்கு அபிஷேகம்; மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: திவ்ய பிரபந்தனம், சேவாகாலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ண மந்திர், ஹலசூரு மார்க்கெட், பெங்களூரு. நேரம்: காலை 7:30 மணி: பூஜைகள் துவக்கம்; 10:30 மணி: அஷ்டோத்தர கலச அபிஷேகம்; மதியம் 12:30 மணி வரை: மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். நேரம்: அதிகாலை 4:00 மணி: மஹா அபிஷேகம்; 8:00 மணி: மலர் அலங்காரம்; 8:30 மணி: சந்தன பிரதி சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். நேரம்: காலை 9:00 மணி: ஆண்டாளுக்கு அபிஷேகம்; இரவு 7:00 மணி: ஊஞ்சல் சேவை. இடம்: ஸ்ரீ ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.ஆடிப்பூர மஹா சண்டி ஹோமம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, துர்கா பரமேஸ்வரிக்கு மஹா சண்டி ஹோமம். நேரம்: காலை 6:0 மணி: யாகசாலை பூஜை, பாராயணம், துர்கா சப்தசதி, 13 அத்யாய ஹோமம், கன்யா சுவாசினி வடுக பிரம்மசாரி பூஜை, மங்கள திரவிய சமர்பணம், வசோத்தாரா, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி, அம்பிகைக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ ஏகாம்பரரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.சண்டி ஹோமம் 28 ம் ஆண்டு சண்டி ஹோமம், நவசக்தி பூஜை. நேரம்: காலை 6:00 மணி: கோ பூஜை; 7:00 மணி: மஹா சங்கல்பம், சண்டி ஹோமம்; மதியம் 1:30 மணி: மஹா மங்களாரத்தி; 1:45 மணி: அன்னதானம்; மாலை 6:00 மணி: நவ சக்தி அர்ச்சனை; இரவு 7:30 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், 16வது கிராஸ், ஜெய் பாரத் நகர், பெங்களூரு.பிரம்ம ரத உற்சவம் நாகம்மா தேவி 32ம் ஆண்டு மண்டல ஆராதனை. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை: பகவதி சேவை (தீப பூஜை). இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.ஆடித்திருவிழா ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. நேரம்: காலை 9:05 மணி: 2007 பால் குடம் ஏந்தி சக்திமார்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வருவர், கோவில் தர்மகர்த்தா பாபு தலைமையில் பக்தர்கள் கையால் அம்மனுக்கு பாலாபிேஷகம்; காலை 11:00 மணி: அன்னதானம். இடம்: ஓம் சக்தி கோவில், சுப்பையனபாளையா, கல்யாண் நகர், பெங்களூரு. நேரம்: மாலை 6:00 மணி: அம்பாளுக்கு அபிேஷகம் செய்வதற்கான குங்குமத்துடன் ஊர்வலம், திருவக்ரகாளி அம்பாளுக்கு 108 கிலோ தாழம்பூ குங்குமம் அபிேஷகம், அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத வினியோகம். இடம்: திரு கதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன்ெஷட்டி கார்டன். ஆடி பிரம்மோற்சவம் நேரம்: இரவு 7:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர்,பெருவிழா துாய வெற்றி அன்னை தேவாலயம் பெருவிழா. நேரம்: காலை 7:00 மணி: திருப்பலி; மாலை 5:30 மணி: ஜெபமாலை பவனி, திருப்பலி. இடம்: துாய வெற்றியன்னை தேவாலயம், சாம்பியன் ரயில் நிலையம் பின்புறம், தங்கவயல்.பொதுகளிமண் பயிற்சி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தே ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.ஓவிய பயிற்சி 'ஆர்ட் பீட்' சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.காமெடி காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஜோக் இன் புராகிரஸ். நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா வழங்கும் ஜே.பி.நகர் காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி.நகர், பெங்களூரு. கபே முஸ்ரிஸ் வழங்கும் ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர். கிரவுண்டெட் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. விச்சஸ் ஆப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஓவர் காபி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: டிரு பிரியு கபே, 3,163, பரமஹம்சா யோகானந்தா சாலை, 12வது 'ஏ' பிரதான சாலை, இந்திரா நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி