டெலிகிராம் செயலியில் குற்றச்செயல்கள் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: போதை பொருள் கடத்தலுக்கு டெலிகிராம் செயலி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்த செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 39, பிரான்ஸ் விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான பிரான்சில்,போதை பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டது. டெலிகிராம் செயலியில் பயனர்களுக்கு இடையே பகிரப்படும் தகவல்களை முறையாக கண்காணிக்க தவறியதாக கூறி, இந்த செயலியின் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், அஜர்பைஜானில் இருந்து தனி விமானம் வாயிலாக பிரான்சின் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள போர்கேட் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் பாவெல் துரோவ் வந்தார். அப்போது, அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், போலீசாருக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காததால், கைது செய்ததாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.டெலிகிராம் செயலியை உலகம் முழுதும் 90 கோடி பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதிகம் பயன்படுத்தும் பயனர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. முன்னதாக, இச்செயலிக்கு ரஷ்ய அரசு, 2018ல் தடை விதித்தது. இதற்கு பல்வேறு சமூக அமைப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.