வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட மிருகத்திற்கு ஜாமீனா? உடனடியாகச் சட்டத் திருத்தம் தேவை.
லக்னோ: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதியை உ.பி., தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும், உத்தரபிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உல்பாத் ஹூசேன் என்பவன், ஹிஷ்புல் முஜாஹிதின் என்ற பயங்கரவாத அமைப்பில் உள்ளான். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி கைது செய்யப்பட்ட ஹூசேனிடம், ஏ.கே.,47 உள்பட பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த அவன் தலைமறைவாகினான். சுமார் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹூசேன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானத்தை போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரபிரதேசத்தின் மொரதாபாத்தில் வைத்து ஹூசேனை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரபிரதேசத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. உத்தரபிரதேசத்திற்கு வருவதற்கு முன்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி பெற்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட மிருகத்திற்கு ஜாமீனா? உடனடியாகச் சட்டத் திருத்தம் தேவை.