உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுப்பாட்டை இழந்த பஸ் 6 வாகனங்கள் மீது மோதல்

கட்டுப்பாட்டை இழந்த பஸ் 6 வாகனங்கள் மீது மோதல்

ஹெப்பால்: பி.எம்.டி.சி., வால்வோ பஸ், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆறு வாகனங்கள் மீது மோதியதில், இரு சக்கர வாகன ஓட்டி படுகாயமடைந்தார்.பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டுக்கு நேற்று முன்தினம் பி.எம்.டி.சி., 'வால்வோ' பஸ் சென்று கொண்டிருந்தது.ஹெப்பால் மேம்பாலத்தில் செல்லும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள், மூன்று கார்கள் மீது மோதியது.இந்த விபத்தில், இரு சக்கர வாகன ஓட்டியின் காலில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து சம்பவங்கள் அனைத்தும், பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை