உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஜூன் 8ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்

டில்லியில் ஜூன் 8ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 8ம் தேதி டில்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் வரும் ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், அரசியல் வியூகங்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக செயற்குழு கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qn9n1uh3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியினருக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் கட்டாயம் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சியினருக்கு கார்கே வலியுறுத்தியுள்ளதால், முக்கிய முடிவுகள் எதும் எடுக்க வாய்ப்புள்ளது என டில்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAJ
ஜூன் 06, 2024 17:48

கூடி?? தம்பிடிக்கு பிரயஜோனம் இல்லப்பு.


Lion Drsekar
ஜூன் 06, 2024 17:25

இனி பார்க்கவே கூடாது என்று நினைத்தால் இனி பார்த்தே ஆகவேண்டிய ஒரு இல்லை, நினைக்கவே கூடாது என்று நினைத்தால் போதுமே நினைத்துக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு கட்டாயம், மறக்கவேண்டும் என்று நினைத்தாலும் மறக்கவே முடியாத நிலையில் சொல்வதைத்தான் , உலகிலேயே ஒரு அதிசயமான ஒரு குரல் அந்த குரலைக் கேட்கவே கூடாது என்று நினைத்தால் அதையும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு நிலை . இதைத்தான் நம் திரையுலகத்தினர் மிக அழகாக , தீனிசைபோன்ற இசையிலும் குரலிலும் பாடியிருக்கிறார்கள் . இது அரசியலுக்கான பதிவு இல்லை, பொதுவாக எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனைக்கு காரணமானவர்களுக்கும் இது பொருந்தும் . " நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை, முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே, யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது, எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது, பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும், கவிஞர் திரு கண்ணதாசன் அவர்களின் பாடலே இதற்க்கு சாட்சி. எந்த கட்சியாக இருந்தாலும் இனியாவது மக்களுக்காக கூடி, சிந்தித்து , செயல்பட்டால் உலகம் உள்ளவரை வரவேற்கும், வந்தே மாதரம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை