உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பாலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஷாத், 41. வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவர், நேற்று காலை மீட்டனா என்ற இடத்தில் ரயில் மோதி பலியான நிலையில் அப்பகுதி மக்கள் கண்டனர். ஒற்றைப்பாலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் கூறுகையில், 'ஆட்டோவை உரிமையாளர் விற்றதில், முகமது நிஷாத் கடும் மன உளைச்சலில் இருந்தார். தனியார் நிறுவனங்களில் கடன் இருந்ததால், கடனை வசூலிக்க மிரட்டி உள்ளனர். இதனால், இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N.Purushothaman
செப் 05, 2024 08:15

தற்கொலை என்பது இஸ்லாத்திற்கு எதிரானது என இஸ்லாமிய நண்பர்கள் கூறி உள்ள நிலையில் இறந்தவருக்கு எவ்வளவு நெருக்கடி இருந்தால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்பது யூகிக்க கூடியதே ...ஆத்மா இளைப்பாற பிரார்த்தனைகள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை