| ADDED : ஜூன் 29, 2024 11:11 PM
தலகட்டாபுரா: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டடத்தில் இருந்து தள்ளி, தொழிலாளியை கொலை செய்த, நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விஷால் யாதவ், 24, அபிஷேக், 25. நண்பர்களான இருவரும், பெங்களூரு தலகட்டாபுரா அருகே அஞ்சனாபூரில் தங்கியிருந்து, கட்டட தொழிலாளிகளாக வேலை செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின், இரண்டாவது மாடியில் அமர்ந்து இருவரும் மது குடித்தனர். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கட்டடத்தில் இருந்து விஷால் யாதவை, அபிஷேக் கீழே தள்ளினார். தலையில் பலத்த காயம் அடைந்த விஷால் யாதவ் பரிதாபமாக இறந்தார். அதிர்ச்சி அடைந்த அபிஷேக், அங்கிருந்து தப்பியோடினார்.நேற்று காலை, கட்டடத்திற்கு வந்த சக தொழிலாளர்கள், விஷால் யாதவ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தலகட்டாபுரா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சக தொழிலாளர்களிடம் விசாரித்தனர்.தலைமறைவாக உள்ள அபிஷேக்கை, போலீசார் தேடி வருகின்றனர்.