உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்பி மோகம்: கால்வாயில் விழுந்த பெண்

செல்பி மோகம்: கால்வாயில் விழுந்த பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நல்கொண்டா: தெலுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடா பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் நேற்று காரில் சென்றனர்.அப்போது வேமுலாபள்ளி பகுதியை ஒட்டியுள்ள நாகர்ஜுனா சாகர் அணை கால்வாய் அருகே காரை நிறுத்தி, புகைப்படம் எடுக்க திட்டமிட்டனர்.தொடர் கனமழையால், நாகர்ஜுனா சாகர் அணையின் பாதுகாப்பை கருதி சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.இதைப் பார்த்த அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், தன் மொபைல் போனில் செல்பி எடுத்தபோது, நிலைதடுமாறி தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று, அப்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், நீண்டநேரம் போராடி அந்தப் பெண்ணை கயிறு கட்டி கரைக்கு மீட்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vijai
செப் 02, 2024 12:18

அப்படியே தண்ணில அடிச்சிட்டு போகட்டும் நிறைய செய்தி பார்த்தும் தப்பு பண்றது என்ன திமிர்


Kasimani Baskaran
செப் 02, 2024 05:53

தன்னிலை மறந்து செல்பி எடுப்பது பேராபத்து. கண்டிப்பாக செல்பி எடுத்தே ஆகவேண்டும் என்றால் டிரோன் மூலம் எடுக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை