உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாடிக்கையாளரை கொன்ற மளிகை கடை உரிமையாளர்

வாடிக்கையாளரை கொன்ற மளிகை கடை உரிமையாளர்

புதுடில்லி:தன் கடையில் பொருட்கள் வாங்குவதை நிறுத்திய வாடிக்கையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த மளிகைக் கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர்.வடமேற்கு டில்லி ஷகுர்பூரில் வசிப்பவர் லோகேஷ் குமார். அதே பகுதியில் மளிகைக் கடை நடத்துகிறார். அவரது மகன்கள் பிரியான்ஸ் மற்றும் ஹர்ஷ் ஆகியோரும் கடையில் தந்தைக்கு உதவியாக இருந்தனர்.லோகேஷ் கடையில் அதே பகுதியில் வசிக்கும் விக்ரம் குமார், 30, என்பவர் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்தார். கடந்த மாதம் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, லோகேஷ் கடையில் பொருட்கள் வாங்குவதை விக்ரம் நிறுத்தி விட்டார்.கடந்த 30ம் தேதி கடை வழியாக நடந்து சென்ற விக்ரமுடன் லோகேஷ் வாக்குவாதம் செய்தார். திடீரென லேகேஷ், அவரது மகன்கள் பிரியான்ஸ் மற்றும் ஹர்ஸ் ஆகிய மூவரும் சேர்ந்து, இரும்புக் கம்பி மற்றும் கத்தரிக்கோலால் விக்ரமை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த விக்ரம், அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மூவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை