உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய நைட்டி

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய நைட்டி

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கொல்லம் அருகே ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த, 63 வயது பெண்ணை தண்ணீர் இழுத்து சென்றது. 12 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட அந்த பெண், நைட்டியில் தண்ணீர் புகுந்து, காற்றில் குடை போல மிதந்ததால் உயிர் தப்பினார். கேரள மாநிலம் கொல்லம் அருகே கல்லடை ஆறு பாயும் கிழக்கு குளக்கடவை சேர்ந்தவர் ஷியாமளா, 62. நேற்று முன்தினம் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். திடீரென வந்த வெள்ளம் ஷியாமளாவை இழுத்து சென்றது.அவர் அணிந்திருந்த நைட்டியில் காற்று ஏறியதால், குடை போல மாறி, அந்த பெண் நீரில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டார். 12 கி.மீ., தொலைவில் உள்ள மங்கலசேரி அருகே செருபொய்கா என்ற இடத்தில் செடி கொடிகளில் ஷியாமளா சிக்கிக்கொண்டார்.அங்கிருந்த இரண்டு பெண்கள் இதை பார்த்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். நைட்டியால் உயிர் பிழைந்த அவர், தான் அணிந்திருந்த ஆடைக்கு நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி