உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4-வது காலாண்டில் மொத்த வளர்ச்சி 7.8 சதவீதம் : மத்திய அரசு

4-வது காலாண்டில் மொத்த வளர்ச்சி 7.8 சதவீதம் : மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 2023-24 ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஜனவரி, மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிசம்பர் வரையிலான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும். இதன் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 8.2 சதவீதம், 2வது காலாண்டில் 8.1 சதவீதம், 3வது காலாண்டில் 8.6 சதவீதம், 4வது காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
மே 31, 2024 20:15

சென்ற ஆண்டு பருவமழை பெருமளவு பொய்த்ததன் பலன் சற்று தாமதமாக வருகிறது. ஆனால் இஸ்ரேல் உக்ரைன் போர்களுக்கு நடுவில் இவ்வளர்ச்சி அபாரமானது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ