உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுத்தையை கொன்ற கிராமத்தினர்

சிறுத்தையை கொன்ற கிராமத்தினர்

ராய்ச்சூர்: மூவரை தாக்கிய சிறுத்தையை, கிராமத்தினரே அடித்து கொன்று ஆம்புலன்சில் போட்டனர்.ராய்ச்சூரின் டி.கரடிகுட்டா கிராமத்தில் சில நாட்களாக, சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை கண்டுபிடிக்கும்படி வனத்துறையிடம், வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்திருந்தனர். சிறுத்தை சிக்காமல் ஆட்டம் காண்பித்தது. கிராமத்தினர் பயத்துடன் நடமாடினர். இந்நிலையில் நேற்று காலை கிராமத்தில் புகுந்த சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். அப்போது, மூவரை தாக்கி சிறுத்தை காயப்படுத்தியது. இதனால் கோபமடைந்த மக்கள், சிறுத்தையை அடித்து கொன்றனர். கால்நடை ஆம்புலன்ஸ் வரவழைத்து, அதில் போட்டு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Aslamy Kahn Aslamy
ஜூலை 09, 2024 13:32

சிறுத்தை இருக்கும் இடம் மக்கள் பயன்படுத்தியது மிகவும் தவறு ஒன்று அரசாங்கம் வேலி அமைக்க வேண்டும் அது நீரை தேடியோ வரும் உணவைத் தேடி கூட வரும் அதோட குணாதிசயம் தாக்கும் தன்மை இறைவன் எழுதி விட்டான் அதை இறக்க வேண்டும் என்று


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி