உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவரை கொன்ற மனைவி காட்டிக்கொடுத்தாள் மகள்

கணவரை கொன்ற மனைவி காட்டிக்கொடுத்தாள் மகள்

சிக்கமகளூரு: சிக்கமகளூரு கடூரின் தொட்டி பீரனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ஜெயண்ணா, 42. இவர் 'டைல்ஸ்' பதிக்கும் வேலை செய்தார். இவரது மனைவி ஸ்ருதி, 35. ஆரோக்கியமாக இருந்த ஜெயண்ணா, 15ல் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தார்.கணவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்; மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் குணமாகவில்லை என, ஸ்ருதி அக்கம், பக்கத்தினரிடம் கூறினார். இறுதிச்சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார்.ஆனால் ஜெயண்ணாவின் உறவினர்களுக்கு, இவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரது 13 வயது மகளிடம் கேட்டபோது, ''என் அப்பாவை மருத்துவமனைக்கு, அம்மா அழைத்துச் செல்லவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அப்பா இறக்கும் வரை, காரிலேயே சுற்றினார்,'' என கூறினார்.உறவினர்கள் இதுகுறித்து, சகராயபட்டணா போலீசாரிடம் தெரிவித்தார். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, ஜெயண்ணாவின் உடலை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.ஸ்ருதிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கிரண், 27, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர், ஸ்ருதிக்கு மகன் உறவு. இதை அறிந்த ஜெயண்ணா, மனைவியை கண்டித்தார். எனவே ஸ்ருதி, கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றதை, மகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.ஸ்ருதி, கிரணை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ