உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் ஸ்டாண்ட் இருக்கு... ஆன இல்லை மூணாறு சுற்றுலா நகரின் அவல நிலை

பஸ் ஸ்டாண்ட் இருக்கு... ஆன இல்லை மூணாறு சுற்றுலா நகரின் அவல நிலை

மூணாறு : மூணாறில் பஸ் ஸ்டாண்ட் இருந்தும் இல்லாத நிலையில் திறந்த வெளியில் செயல்படும் அவலநிலை நீடித்து வருகிறது.சுற்றுலாவில் உலக அளவில் பிரசித்து பெற்ற மூணாறில் பஸ் ஸ்டாண்ட் இருந்தும், இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பழைய மூணாறில் மூலக்கடை பகுதியில் ஊராட்சி சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் பயனின்றி பல ஆண்டுகளாக லாரிகள் நிறுத்தும் இடமாக செயல்படுகிறது. அதன்பிறகு பழைய மூணாறில் தனியார் கம்பெனியின் விளையாட்டு மைதானம் எதிரே ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியது.இதனிடையே நகரில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டது. அங்கு நிறுத்தப்படும் பஸ்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி போக்குவரத்து ஒழுங்குமுறை ஆலோசனை குழு பரிந்துரைபடி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தபால் அலுவலகம் ஜங்ஷனுக்கு பஸ்ஸ்டாண்ட் மாற்றப்பட்டது. அங்கு பஸ் ஸ்டாண்ட்டிற்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி ஆட்டோ ஸ்டாண்ட்டில் திறந்த வெளியில் கடும் நெருக்கடியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட பல பகுதிகளில் இருந்து தினமும் 50 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றபோதும் வெயில், மழை ஆகியவற்றில் இருந்து ஒதுங்குவதற்கு கூட கட்டமைப்பு வசதி எதுவும் இல்லை. ஆகவே அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட்டை ஏற்கனவே செயல்பட்ட பகுதிக்கு மாற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கியதால் பஸ்ஸ்டாண்டில் கட்டமைப்பு வசதி இன்றி பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

karthik
ஜூன் 15, 2024 10:30

இவ்வளவு மோசமாக கேவலமா ஒரு சுற்றுலா தளத்தை வைத்திருக்க முடியும் என்றால் அது கம்யூனிஸ்ட் காங்கிரஸ் காட்சிகளால் மட்டுமே முடியும்.. கேரளாவை என்றோ உலகத்தராத்திலான சுற்றுலா தலமாக மாற்றி இருக்க முடியும்.. ஆனால் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் இருக்கும் வரைக்கும் அது நடக்காது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி