பெண்ணின் தந்தையை கொல்ல முயற்சி ஒருதலை காதலன் உட்பட மூவர் கைது
கோலார்: கோலார் மாவட்டம், ஹொன்னேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த சுனில்குமார், 27, ஒருதலையாக காதலித்துள்ளார்.தன்னை காதலிக்கும்படி அவருக்கு சுனில்குமார் நெருக்கடி கொடுத்துள்ளார். நாளடைவில் தொந்தரவு அதிகரித்தது. இதுகுறித்து தன் தந்தையிடம் இளம்பெண் கூறியுள்ளார்.இதையடுத்து சுனில்குமாரை ராமசாமி எச்சரித்துள்ளார். ராமசாமி இருக்கும் வரை தன்னால் இளம்பெண்ணை காதலிக்க முடியாதென சுனில்குமார் கருதினார்.ராமசாமியை கொலை செய்ய, கோலார் வினோபா நகர் யஷ்வந்த் யாதவ், 26, உரிகிளி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், 26, ஆகியோருடன் சேர்ந்து சுனில்குமார் திட்டமிட்டார்.கார் ஒன்றில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஹொன்னேனஹள்ளி சாலையில் ராமசாமியை வழிமறித்துள்ளனர். வெட்டி கொல்ல முயன்ற அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய ராமசாமி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். கார், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர்களில் யஷ்வந்த் யாதவ் மீது பார்ப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில், பிரபல கன்னட நடிகர் வஜ்ரமணி உறவினர் பெண்ணை கடத்தி பணம் பறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.