மேலும் செய்திகள்
நீர்த்தொட்டியில் சுரக்கும் கழிவுநீர் ஊற்று
26-Aug-2024
உடுப்பி : மதம் மாறும்படி காதலியை, 'டார்ச்சர்' செய்ததுடன், பாலியல் தொல்லையும் கொடுத்த, மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது டேனிஷ்கான், 27. உடுப்பி மணிப்பால் மருத்துவமனையில் மருத்துவம் படிக்கிறார். இவருடன், டில்லியைச் சேர்ந்த 27 வயது பெண்ணும் படித்து வருகிறார். ஒரே வகுப்பு என்பதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகினர். பின், இருவரும் காதலித்தனர்.தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, காதலி கேட்டபோது, 'எனது மதத்திற்கு மாற வேண்டும். அப்போது தான் திருமணம் செய்வேன்' என, முகமது கூறி உள்ளார். இதற்கு காதலி மறுத்ததால், மதம் மாறும்படி டார்ச்சர் கொடுத்துள்ளார்.கடந்த மார்ச் 11ல்தன் அறைக்கு காதலியை அழைத்து சென்று தாக்கியதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். போனில் பேசி, மதம் மாறும்படி தொல்லை கொடுத்துள்ளார்.மனம் உடைந்த காதலி கடந்த மாதம் 31ம் தேதி முகமது மீது, உடுப்பி மகளிர் போலீசில் புகார் செய்தார். அவர் மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக இருந்தவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். நேற்று காலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
26-Aug-2024