உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைனர் மகன் ஓட்டிய டிராக்டர் ஒருவர் பலி; தாய் கைது

மைனர் மகன் ஓட்டிய டிராக்டர் ஒருவர் பலி; தாய் கைது

குடகு,: மைனர் மகனை டிராக்டர் ஓட்ட விட்டதில் ஏற்பட்ட விபத்தில் பைக் ஓட்டியவர் பலியானார். சிறுவனின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.குடகு மாவட்டம், குஷால் நகரை சேர்ந்தவர் துளசி. 40. இவரது மகனுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை. அதற்குள், கடந்த மே 31ம் தேதி தனது மகன், டிராக்டர் ஓட்ட அனுமதித்துள்ளார்.டிராக்டர் எடுத்து கொண்டு குஷால் நகர் - சுந்தர் நகர் சாலையில் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியுள்ளார். இதனால், எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில், அந்நபர் உயிரிழந்தார்.ஒரு மைனர், வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், சட்டப்படி வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்படுவார். அதன்படி, சிறுவனின் தாய் துளசியை, போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே கடந்தாண்டு தனது மகனுக்கு டிராக்டர் கொடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட விபத்தில், ஒருவர் படுகாயம் அடைந்தார். அப்போது, கைதான தாய் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு ஒரு நாள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதித்து, கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ