மேலும் செய்திகள்
வாலிபரை திருநங்கையாக மாற்றிய 5 பேருக்கு வலை
21-Aug-2024
புதுடில்லி:தென்மேற்கு டில்லி துவாரகாவில், தள்ளு வண்டியி தின்பண்டங்கள் விற்பவர், பஸ் மோதி உயிரிழந்தார். நங்லோய் பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார்,20, அவரது உறவினர் தர்மேந்தர்,34. இருவரும் துவாராகா மார்க்கெட்டில் தின்பண்டங்களை விற்றுவிட்டு நேற்று மின் தினம் இரவு தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.பாபா ஹரிதாஸ் நகரில் இரவு 11:00 மணிக்கு நங்லோய்- - நஜாப்கர் சாலையில் சென்றபோது,நங்லோயில் இருந்து வந்த அரசு பஸ், இருவர் மீதும் மோதியது. விஜயகுமார் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டவுடன் பஸ்சை நிறுத்திய அதன் டிரைவர், காயம் அடைந்த தர்மேந்தரை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவானார்.தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை தேடுகின்றனர்.
21-Aug-2024