உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் கழன்ற பெட்டிகள்; பயணியர் அலறல்

ரயிலில் கழன்ற பெட்டிகள்; பயணியர் அலறல்

புதுடில்லி; உத்தர பிரதேசத்தில், நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயிலின், 'கப்ளிங்' உடைந்து, ரயில் பெட்டிகள் கழன்று முன்னும் பின்னுமாக சென்றதால் பயணியர் அலறினர். உ.பி.,யின் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு ரயில் நிலையத்துக்கு, ஒடிசா செல்லும் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் சமீபத்தில் வந்தது. அப்போது, ரயிலின் 'எஸ் 4, எஸ் 5' ஆகிய பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் செயின் உடைந்தது. இதனால், இரு பெட்டிகளும் கழன்று, முன்னும் பின்னுமாக சென்றதால் உள்ளே இருந்த பயணியர் அலறினர். இதையடுத்து, கழன்ற பெட்டிகள் தீன் தயாள் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ரயிலுடன் இணைக்கப்பட்டன. இதனால், நான்கு மணி நேர தாமதத்துக்கு பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழன்
மார் 05, 2025 05:10

விஷ்வகுரு ஆட்சியில் இதெல்லாம் ஒரு விசயமா?? போயி வேலைய பாரு அப்பு இதுக்குத்தான் நாங்க ரயில்ல போறதே இல்லப்பூ ஆனா நாங்க மக்களிடம் புடுங்கும் ஜிஸ்டி வரி மட்டும் மாதா மாதம் கலெக்ஷன் ராக்கெட் வேகத்தில் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை