தண்டவாளத்தில் டெலிபோன் கம்பம் இருவர் கைது
கொல்லம்: கேரளாவில், கொல்லம் அருகே தண்டவாளத்தில் பெரிய டெலிபோன் கம்பம் வைக்கப்பட்டுஉள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதிர்ஷ்டவசமாக ரயில் ஏதும் அந்த கம்பத்தின் மீது மோதவில்லை. சரியான நேரத்தில் போலீசார் அங்கு சென்று, அந்த கம்பத்தை அகற்றி அதை வைத்தவர்கள் குறித்து விசாரித்தனர்.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, பெரும்புழா என்ற பகுதியை சேர்ந்த ராஜேஷ், 33, மற்றும் இளம்பல்லுார் என்ற இடத்தை சேர்ந்த அருண், 39, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.அப்போது, அந்த கம்பத்தின் மீது ரயில் மோதும் போது, கம்பம் சுக்கு நுாறாக உடைந்து விடும்; அதன்பின் அதில் உள்ள இரும்பை எடுத்துச்சென்று விற்கலாம் என, எண்ணியதாக அவர்கள் கூறினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.