மேலும் செய்திகள்
ரூ.60 லட்சம் போதை பறிமுதல்; ஒருவர் கைது
06-Feb-2025
கே.ஆர்.புரம்: பெங்களூரில் போதைப் பொருள் விற்ற நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு கே.ஆர்.புரத்தில் ஒரு வீட்டில் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.டிராலியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 109 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மதிப்பு 17 லட்சம் ரூபாய்.போதைப் பொருளை விற்ற நைஜீரியாவின் எஸ்லோ செர்மன், ஜான் சுக்வா கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்றது தெரிந்தது.சுற்றுலா விசாவில் இங்கு வந்த இருவரும், விசா காலாவதியாகியும் இங்கு வசித்து வருவது தெரிய வந்துள்ளது.
06-Feb-2025