| ADDED : மே 09, 2024 05:24 AM
ஷிவமொகா, : முன்பகை காரணமாக இருவரை ரவுடி கும்பல்கற்களைப் போட்டு கொலை செய்தது.ஷிவமொகா நகரின் நேற்று காலை லஷ்கர் மொஹல்லா அருகே இருவர் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியினர், கோட்டே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது, ஷோஹிப், 30, கவுஸ், 35, ஆகியோர் என்பது தெரிய வந்தது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கவிரத்ன காளிதாசா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஷோஹிப், கவுஸ். இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கி, கல்லைப் போட்டு கொலை செய்துள்ளது.இவர்களுக்கும் நேற்று காலை யாசின் குரேஷி என்ற ரவுடிக்கும் முன்பகை இருந்துள்ளது. இதன் காரணமாக, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஷோஹிப், கவுஸ் ஆகிய இருவரையும் யாசின் குரேஷி கும்பல் வழிமறித்துத் தாக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.