மேலும் செய்திகள்
எஸ்.ஐ., யை வெட்ட முயன்ற ரவுடிகள் நால்வர் கைது
20-Aug-2024
மூணாறு:மூணாறுக்கு சுற்றுலா வந்து திரும்பியவர்களின் டூவீலர், தனியார் பஸ் மீது மோதிய விபத்தில், இருவர் பலியாகினர்.கேரளா பாலக்காடு அருகே ஆலந்தூர் சுண்டக்காடு பகுதியைச் சேர்ந்த அப்ஷல்நாசர் 22, அன்ஷாத் 18, ஆகியோர் ஒரு டூவீலரில் மூணாறுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். மூணாறில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு மாலையில் ஊர் திரும்பினர்.கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் ராணிக்கல் பகுதியில் முன் சென்ற வாகனத்தை கடக்க முயன்றனர். அப்போது எதிரே ஆலுவாவில் இருந்து மூணாறை நோக்கி வந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் டூவீலரில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்தில் பலியாகினர். நேரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Aug-2024