மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரு : உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில், பா.ஜ., காங்கிரஸ் இரு வேட்பாளர்களுக்கும் 50 - 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக என அரசியல் வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளனர்.கர்நாடகாவில் முதல்கட்டமாக உடுப்பி - சிக்கமகளூரு உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தற்போது இத்தொகுதிகளில் யார் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற விவாதம், ஹோட்டல்கள், பூங்காக்கள், பஸ் நிலையங்கள், திருமண வீடுகள், விழாக்கள், பண்டிகைகளில் நடந்து வருகின்றன. பா.ஜ., - காங்.,
உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில் பா.ஜ.,வின் கோட்டா சீனிவாச பூஜாரி; காங்கிரசின் ஜெயபிரகாஷ் ஹெக்டே உட்பட 10 பேர் போட்டியிட்டனர். ஆனாலும் இத்தொகுதியில் பா.ஜ., காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவியது. இருவரில் யார் வெற்றி பெறுவர் என்ற விவாதம் வாக்காளர்கள் இடையே பரவலாக பேசப்படுகிறது.கடந்த தேர்தலை போன்று இம்முறையும் ஹிந்துத்துவா செல்வாக்கு செலுத்துமா அல்லது வாக்காளர்கள் காங்கிரசின் வாக்குறுதிக்காக ஓட்டு போட்டனரா என்று விவாதித்து வருகின்றனர்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் ஷோபா, ம.ஜ.த., வேட்பாளர் பிரமோத் மத்வராஜை, 3,49,599 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதற்கு ஹிந்துத்துவா மற்றும் மோடியின் அலையும் முக்கிய பங்கு வகித்தன. 50 - 50 வாய்ப்பு
ஆனால் இம்முறை வாக்காளர்களின் எண்ணத்தில் சில மாறுதல் தென்படுகின்றன. வெற்றி பெறும் வேட்பாளருக்கும், அடுத்த இடத்தில் வரும் வேட்பாளருக்கும் கடந்த தேர்தலை போல வெற்றி வித்தியாசம் அதிகம் இருக்காது. இருவருக்குள்ளும் கடுமையான போட்டி நிலவியுள்ளது.இரு கட்சி வேட்பாளர்கள் மீதும் வாக்காளர்களுக்கு பெரியளவில் அதிருப்தி இல்லை. இருவர் மீதும் நன்மதிப்பை வைத்துள்ளனர். இதனால் இரு கட்சிகளின் வெற்றிக்கு 50 - 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளனர்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7