உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது; கேரள முதல்வர் Vs காங்கிரஸ் மோதல்

மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது; கேரள முதல்வர் Vs காங்கிரஸ் மோதல்

திருவனந்தபுரம்: பா.ஜ., மீது எந்தக் குறையையும் காணாத கேரள முதல்வர் பினராயி விஜயன், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் காங்கிரஸ் மீது சுமத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மதசார்பற்ற ஓட்டுக்களை ஒருங்கிணைக்க விடாமல், காங்கிரஸ் கட்சி பிரித்ததன் காரணமாகவே, பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. டில்ல் சட்டசபை தேர்தலிலும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், பா.ஜ.,வை தோற்கடித்திருக்கலாம். ஆனால், ஆம்ஆத்மியை தோற்கடிக்க வேண்டும் என்று செயல்பட்டதால் தான் ஒரு இடம் கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. பா.ஜ.,வை எதிர்க்கும் பிற எதிர்க்கட்சிகளிடம் மூர்க்கத்தனமான அணுகுமுறையை காங்கிரஸ் வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வகுப்புவாத சக்திகளுடன் கூட்டணி போட்டுக் கொண்டு இடதுசாரிகளை தோற்கடிக்க முயற்சித்து வருகிறது. அப்படித்தான், திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ., வெற்றி பெறச் செய்தது. 2026 சட்டசபை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். பினராயி விஜயனின் இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி., ஷபி பரம்பில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பா.ஜ.,வுடன் இணைந்து கொண்டு காங்கிரசை தனித்து விட பார்க்கிறார். பா.ஜ., மீது எந்தக் குறையையும் காணாத அவர், அனைத்து குற்றச்சாட்டுக்களையும் காங்கிரஸ் மீது சுமத்தி வருகிறார். இதுதான் தேசிய தலைமைக்கு கொடுக்கும் ஆதரவா?. லோக் சபா தேர்தலின் போது இண்டி கூட்டணி அமைவதற்காக காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. ஆனால், மாநில அளவிலான அரசியல் வேறு மாதிரி இருக்கிறது. டில்லியில் ஆம்ஆத்மி கட்சி தான் எங்களுக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவித்தது. தேசிய அளவிலான அனுசரித்து நடந்து கொள்ள காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால், சட்டசபை தேர்தல்களை பொறுத்தவரையில் மாநில கட்சிகள் அவர்களின் இஷ்டம் போலநடந்து கொள்கின்றன. கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக போராடி வருகிறோம். கடந்த முறை கோவிட் அவர்களை காப்பறறியது. 2026 தேர்தலில் அவர்களால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ