உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான கட்டணத்தை குறைப்போம் மத்திய அமைச்சர் நாயுடு தகவல்

விமான கட்டணத்தை குறைப்போம் மத்திய அமைச்சர் நாயுடு தகவல்

புதுடில்லி, ''சாதாரண மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு டிக்கெட் விலையை குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும்,'' என, புதிதாக பொறுப்பேற்றுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.நம் நாட்டில் இயக்கப்படும் 60 சதவீத பயணியர் விமானங்களை, 'இண்டிகோ' நிறுவனமும், 30 சதவீத விமானங்களை, 'டாடா' குழுமத்தின், 'ஏர் - இந்தியா' நிறுவனமும் இயக்குகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது. 15.30 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.இது 2030ல் 30 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விமான டிக்கெட் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:விமானப் போக்குவரத்து துறையில் நாம் முதன்மையாக திகழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கேபினட்டின் மிக இளம் அமைச்சரான என்னிடம் மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை சவாலாக ஏற்று நிறைவேற்றுவேன்.விமான டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என, பார்லிமென்ட் கமிட்டி கடந்த பிப்ரவரியில் பரிந்துரைத்துள்ளது. ஒரு சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான கட்டண உச்ச வரம்பை ஆய்வு செய்யலாம். சாதாரண மக்களும் விமானப் பயணம் செய்யும் வகையில் கட்டணங்களை குறைப்பதே எங்கள் நோக்கம். ரயில் கட்டணத்துக்கு நிகராக, விமானப் போக்குவரத்து கட்டணம் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். அதில் அதிக கவனம் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூன் 14, 2024 17:58

அப்போது இத்தனை நாட்களாக கூட்டியதும் நீங்கள் தானா?


Vathsan
ஜூன் 14, 2024 10:33

சும்மா அடிச்சு விடு காச பணமா. அரசு விமானசேவையை தனியாருக்கு விற்று விட்டு எப்படி குறைப்பீர்கள். முடிந்தால், பெட்ரோல் டீசல் விலையை நியமன விளையான 40-50 ரூபாய்க்கு விற்றால் ரயில், விமான கட்டணங்கள் தானாக குறையும், ஆனால் உங்களால செய்ய முடியாது. செயதால் உங்கள் கட்சி நிதி குறைந்து விடும். தேசத்துக்கு எதிராக எரிபொருள் விலையை கன்னாபின்னா என்று ஏற்றிவிட்டு தேசபக்தன் என்று கூவுங்கள்.


hari
ஜூன் 14, 2024 11:40

ஷேர் ஆட்டோல போற உனக்கு ஏன் இவளோ கோவம்


பாமரன்
ஜூன் 14, 2024 10:07

விமான சர்வீஸ்கள் எல்லாம் தனியாரிடம்... விமான நிலையங்கள் சென்னை போன்ற சில மொக்கைகளை தவிர பெரும்பாலும் தனியாரிடம்... அதிலும் மெஜாரிட்டி நம்ம பைனான்சியர் கண்ட்ரோலில்... இந்த அமைச்சரே தேவையில்லாத ஆணி... இவர் ஸ்டேட்மெண்டை இந்தியா வல்லரசாகும் ரேஞ்சுல தான் ஜோக்கா பார்க்கணும்... வேணும்னா நாட்டில் எல்லா ரயிலையும் வந்தே பாரத் .. வந்தே டபுள் பாரத்துன்னு போட்டு கட்டணங்களை உயர்த்திட்டா விமான கட்டணங்கள் குறைவு மாதிரி காட்டிக்கலாம்..


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி