உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.லோக்சபாவுக்கு நடக்க உள்ள ஏழு கட்ட தேர்தல்களில் தற்போது முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப். 19-ல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி நாம் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை ஒப்புகை சீட்டுடன் உறுதி செய்யும் கருவியாகும்.இந்நிலையில் ஓட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் விவிபேட்டில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், சிறிய கட்டுப்பாட்டு கருவி வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா அல்லது விவிபேட் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ளதா ? வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய கட்டுப்பாட்டு கருவியை ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? என பல்வேறு கேள்வி எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரியை பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி ஆஜரானார். அப்போது அனைத்து சிறிய கட்டுப்பாட்டு கருவிகளும் ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்ய முடியும்; அதை மாற்ற முடியாது. சின்னங்களை ஏற்றும் அலகுகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை ECIL 1400 அலகுகளையும், BHEL 3400 அலகுகளையும் கொண்டுள்ளது. விவிபேட், இவிஎம், கண்ட்ரோலர் ஆகிய மூன்றும் தனித்தனியாக புரோகிராம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு மூன்று யூனிட்களுமே சீலிட்டு வைக்கப்படுகின்றன'' என விளக்கமளித்தார்.இதனையடுத்து, ''தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று (ஏப்.26) தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஏப் 26, 2024 11:30

நூறு தொகுதிகளுக்கு ஒரு தொகுதியிலாவது விவிபேட் உடன் சரிபார்க்கச் சொல்லலாம். உண்மை தெரிஞ்சிரும். நீதிமன்றத்தின் மேலே உள்ள நம்பிக்கை குறைந்து விட்டது.


R Kay
ஏப் 26, 2024 03:31

நீதியரசர்கள் தங்களை ஆல் இன் ஆல் அழகு ராஜா என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கேள்விகள் சூப்பர் காமெடி microprocessor, microcontroller, FPGA chips, memory, battery, instructions, program இவை இல்லாமல் இதுபோன்ற எந்த இயந்திரமும் இயங்காது ஒருமுறை ஏற்றப்பட்ட routine or program-ஐ இவ்வளவு கண்கண்ணிப்புகள் உள்ள நிலையில் வோட்டு இயந்திரங்கள் sleep mode-இல் இருக்கும்போது, அவற்றிற்கான access இல்லாதபோது மாற்ற இயலாது இருக்கும் இயந்திரங்களில் இன்னும் முன்னேற்றத்தை பற்றி பேசாமல் பழைய வோட்டு சீட்டு முறைக்கு சென்று கற்காலத்திற்கு செல்ல எதிர்கட்சிகள் துடிக்கிறார்கள்


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2024 23:20

இந்தியாவின் கண்டுபிடிப்பில் மிகவும் முதன்மையானது வோட்டிங் மெஷின் தான் நூறு கோடி மக்களின் ஓட்டை மிக எளிதாக ஒரு பட்டனை தட்டினால் சொல்லிவிடும் மிகவும் குவாலிட்டியான மெஷின் கள்ள ஒட்டு போடமுடியாது பூத் கேப்சர் செய்ய முடியாது மரங்களை வெட்டி தயாரிக்கும் பேப்பர் மற்றும் இங்க் வீணாகாது தொகுதிக்கு ஒரு மெஷினின் ஓட்டுக்களை எண்ணி சரிபார்த்தால் போதும் அதுகூட உண்மையில் தேவை இல்லை மற்றபடி மெஷினை முழுதாக நம்பலாம் மோடியின் வெற்றியை கொண்டாட பிஜேபி தொண்டர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள் சிலமாதங்கள் அதை தள்ளிபோட நினைக்கும் அக்கப்போர் பேர்வழிகள் எண்ணம் நிறைவேறாது ஒரு நாள் தள்ளிபோட்டால் கூட நாட்டின் வளர்ச்சியை தான் பாதிக்கும் அதனால் அக்கப்போர் பேர்வழிகள் பேசாமல் போய் வேறவேலையை பாருங்கள் அல்லது வேறொரு அக்கோற்போர் வேலையை துவங்குங்கள்


Dharmavaan
ஏப் 25, 2024 21:44

தெரிந்த தீர்ப்புதானே இதில் என்ன மழுப்பல்


மேலும் செய்திகள்













புதிய வீடியோ