உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., அரசின் முகத்திரையை கிழிப்பதாக விஜயேந்திரா உறுதி

காங்., அரசின் முகத்திரையை கிழிப்பதாக விஜயேந்திரா உறுதி

மாண்டியா: ''விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் அரசின் முகத்திரை சட்டசபையில் கிழிக்கப்படும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த ஊர் மாண்டியா. அவரது மகனும், மாநில பா.ஜ., தலைவருமான விஜயேந்திரா, மாண்டியா மாவட்டம், கொத்தத்தி கிராமத்தில், விவசாயிகளுடன் இணைந்து, நேற்று நெல் நாற்று நட்டார்.வேட்டியை மடித்துக் கொண்டு, வயலில் இறங்கி நாற்று நட்டு விவசாயியாகவே மாறினார்.பின், விஜயேந்திரா கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல விளை பொருட்களின் ஆதார விலையை உயர்த்தியது. 'கிசான் சம்மான்' திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தை, சித்தராமையா அரசு நிறுத்திவிட்டது.எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, விவசாய நிலத்தில் மின்மாற்றி அமைப்பதற்கு, 25,000 ரூபாய் செலுத்தினால் போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போதைய காங்கிரஸ் அரசு, 3 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.ஏழைகள் விரோதி, வளர்ச்சியோ பூஜ்யம் என இந்த அரசு எந்த சாதனையும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு எதிராக காங்கிரஸ் அரசு செயல்படும் காங்கிரஸ் அரசின் முகத்திரையை சட்டசபையில் கிழிப்போம்.காவிரி நீர்ப்பிடிப்பு விவசாயிகளுக்கு அநீதி செய்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களை குஷிப்படுத்த, தமிழகத்துக்கு தொடர்ந்து காவிரி நீர் திறந்துவிடப்படுகிறது.மாநிலத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. வருங்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சித்தராமையா, விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு தீவனத்தை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். எடியூரப்பா, விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்தவர். விவசாய பம்ப்செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை