நாங்கள் தான் வெல்வோம்!
மஹாராஷ்டிராவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆளும், 'மஹாயுதி' கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். தீபாவளிக்கு நாங்கள் தான் பட்டாசு வெடித்து கொண்டாடப் போகிறோம். அதை, எதிர்க்கட்சியினர் வேடிக்கை பார்ப்பர். ஏக்நாத் ஷிண்டே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனாபா.ஜ., ஆட்சி அமைக்கும்!
நாட்டின் வளர்ச்சியில், ஜம்மு - காஷ்மீர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். அங்கு வெளிப்படையான, ஊழலற்ற, வளர்ச்சியை இலக்காக வைத்து செயல்படும் பா.ஜ., அரசு அமையும்.ஜிதேந்திர சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,ராகுல் தான் பிரதமர்!
மத்தியில் காங்., தலைமையிலான அரசு எப்போது ஆட்சிக்கு வந்தாலும், ராகுல் தான் பிரதமராக இருப்பார். இது, 100 சதவீதம் உண்மை. அவர் பேசுவதை மக்கள் புரிந்து கொள்கின்றனர். மக்களின் எண்ணங்களையே ராகுல் பிரதிபலிக்கிறார்.அபிஷேக் சிங்வி, ராஜ்யசபா எம்.பி., - காங்.,