உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்: ஆய்வை துவக்கினார் பிரதமர் மோடி

முதல் 100 நாட்களில் என்ன செய்ய வேண்டும்: ஆய்வை துவக்கினார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், ஆட்சி பொறுப்பை ஏற்றதும், முதல், 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்தினார்.லோக்சபாவுக்கான தேர்தல்கள் முடிவடைந்து, நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளன.லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆட்சி அமைந்ததும், முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தார். அதுபோல, ஒவ்வொரு துறையின் சார்பில், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ஏழு கூட்டங்களில் பங்கேற்றார். அதில், முதல், 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டமும் அடங்கும். இதைத் தவிர, கோடை வெயில் மற்றும் பருவமழை தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார். ராஜ-ஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று விளக்கப்பட்டது. அதை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தினார். கோடை வெயிலால், தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.சமீபத்தில், 'ரேமல்' புயலால், கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட தீவிபத்துகள் குறித்தும் ஆய்வு செய்தார். வரும், 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாகவும், அதிகாரிகளுடன், மோடி ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Sukumar R
ஜூன் 04, 2024 00:11

எந்த அரசு வந்தாலும், ஒன்று கார்பொரேட்களுக்கு செய்கிறது. இல்லையென்றால் வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு செய்வதாக சொல்லி 1000, 2000 என்று கொடுத்து மழுப்புகிரார்கள். ஆனால் எல்லோரும் லோயர் மிடில் க்ளாஸ் என்பவர்களைப் பற்றி மறந்துவிடுகிறார்கள். இவர்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை. இவர்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுபவர்கள், பெரிய துணிக்கடைகளில துணி மடிப்பவர்கள், மருந்துக்கடைகளில் பணிபுரிபவர்கள் இப்படி நாட்டில் எங்கும் பரவி இருக்கிறார்கள். இவர்களுக்கு இனாம் கேட்கவும் தெரியாது கொடுக்கவும் ஆளில்லை. முனிசிபல் ஸ்கூல் வாசலில் நின்று பாருங்கள். பைக்கில் அவசரமாக வந்து பையனை இறக்கிவிட்டு பறந்து செல்வார் பாருங்கள்... அவர்...அவரைத்தான் சொல்கிறேன். அவரிடம் இருந்து பைக்கை பிடுங்கினால் சைக்கிளில்... சைக்கிளை பிடுங்கினா முதுகி வைத்துக்கொண்டு வந்து ஸ்டூலில் பையனை விடுவார்... அவர்களுக்கு நேரடியாக எந்த உதவியும் உங்களால் செய்ய முடியாது. எல்லா நாட்டிலும் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக இருக்கிறார்கள். எப்படி... எல்லா நாடுகளிலும் பள்ளிப்படிப்பு மற்றும் மருத்துவம் இலவசம். ஆகவே பிரதமர் அவர்கள் அதை செய்யுங்கள் போதும்


Devaraju
ஜூன் 03, 2024 21:55

1. Uniform civil code


தியானானந்தா
ஜூன் 03, 2024 21:10

மற்றவங்களையும் தியானத்துக்கு அனுப்புங்க. ஆளுக்கு மூணு நாள். நூறுநாள் ஓடியே போயிடும்.


ராம்கி
ஜூன் 05, 2024 07:18

தமிழ்நாட்டில் மக்கள் சரகடித்துவிட்டு இரவு பகல் என்று பாராமல் தெரு ஓரங்களில் தினமும் தியானம் செய்வதை பார்க்கிறேன். பலர் அதை தங்கள் இல்லங்களில் செய்வதை அறிகிறேன். வாழ்க டாஸ்மாக் "குடி"மக்கள் தியானம்.


A1Suresh
ஜூன் 03, 2024 19:48

நீதித்துறையின் மீதும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் உடனடியாகத் தேவை. திமுக எம்பிக்களும் அமைச்சர்களும் எளிதில் தப்பிவிடுகின்றனர்.


venugopal s
ஜூன் 03, 2024 16:59

முதலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா என்று பாருங்கள்!


Narayanan
ஜூன் 03, 2024 13:48

மோடிஜி செய்யவேண்டிய பணிகள் : 1. ஜி எஸ் டி மாற்றப்படவேண்டும் 2. பெட்ரோல் விலையை எழுபது ரூபாய்க்கு கொண்டு வரவேண்டும் 3. அனைத்து சுங்க சாவடிகளை நீக்கவேண்டும் அல்லது ஐம்பது ரூபாய்க்கு மிகாமல் கட்டணம் இருக்கவேண்டும் 4. வீட்டு பயன்பாட்டு காஸ் விலை குறைக்கவேண்டும் . 5. முக்கியமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 03, 2024 11:47

முதலாவதாக எல்லா ஊழல்வாதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கவேண்டும். நீதிமன்றங்கள் அவர்களுக்கு ஜாமீன், வாய்தா போன்றவற்றை மறுக்கவேண்டும். நல்லாட்சி மலரவேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 03, 2024 11:27

உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் செய்யாத ஒன்றை இப்போதாவது செய்யுங்கள் போதும். ஆம், தமிழ் நாட்டில் கொள்ளையர்கள் கொள்கைக்காரர்கள் போல பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களே, அவர்களை திகாரில் தனி சமத்துவபுரம் அமைத்து வசிக்க ஏற்பாடு செய்யுங்கள் போதும்.


Raa
ஜூன் 03, 2024 11:10

முதலில் சுங்கச்சாவடி கொள்ளையை நிறுத்துங்கள்.


venkatesa perumal k
ஜூன் 03, 2024 10:51

அடுத்த 100 நாட்களுக்கு எந்த நாட்டில் போய் ஒளிந்துகொள்வது ஆலோசனை செய்து வருகிறார் பப்பு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை