உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்யாதது ஏன்? முன்னாள் மத்திய அமைச்சர் விளக்கம்!

பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்யாதது ஏன்? முன்னாள் மத்திய அமைச்சர் விளக்கம்!

புதுடில்லி, 'லோக்சபா தேர்தலில் ஏன் ஓட்டளிக்கவில்லை. கட்சிக்காக ஏன் பிரசாரம் செய்யவில்லை?' என்று, பா.ஜ., அனுப்பியுள்ள விளக்க நோட்டீசுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதில் அனுப்பியுள்ளார்.பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவருடைய மகனான ஜெயந்த் சின்ஹா, ஜார்க்கண்டில் இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்பதை உணர்ந்து, கடந்த மார்ச் மாதம், கட்சித் தலைவர் நட்டாவுக்கு, ஜெயந்த் சின்ஹா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.அதில், தனக்கு நேரடி தேர்தல் பணிகள் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஜார்க்கண்டில் உள்ள அவருடைய ஹசாரிபாக் தொகுதிக்கு, மனிஷ் ஜெய்ஸ்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில், கட்சியின் ஜார்க்கண்ட் பொதுச் செயலர் ஆதித்ய சாகு, விளக்க நோட்டீஸ் ஒன்றை ஜெயந்த் சின்ஹாவுக்கு அனுப்பியுள்ளார். அதில், லோக்சபா தேர்தலின்போது ஏன் ஓட்டளிக்கவில்லை என்றும், கட்சிக்காக ஏன் பிரசாரம் செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இது குறித்து, பதில் கடிதத்தை ஜெயந்த் சின்ஹா அனுப்பியுள்ளார். சமூக வலைதளத்தில் அதை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:இந்த விளக்க நோட்டீஸ் ஆச்சரியமாக உள்ளது. மேலும், அதை சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளீர்கள். அதனால், இந்த பதிலையும் சமூக வலைதளத்தில் வெளியிடுகிறேன்.வெளிநாடு செல்லவிருந்ததால், தபால் ஓட்டு போட்டேன். கட்சியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். என் தொகுதிக்கும், நாட்டுக்கும், கட்சிக்கும் உரிய பங்களிப்பை அளித்துள்ளேன் என்று நம்புகிறேன்.நேரடி தேர்தல் பணிகளை ஒதுக்க வேண்டாம் என்று கட்சித் தலைவர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். என் தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.தேர்தல் பிரசாரத்துக்கு வரும்படியோ அல்லது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படியோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. பிரசாரம் செய்யும்படி யாரும் கேட்கவில்லை. அதனால், பிரசாரத்தில் நான் ஈடுபடவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N DHANDAPANI
மே 25, 2024 21:42

முழுவதையும் அப்படியே நம்புறேன் சார்... உங்க அப்பா பிஜேபியில் இருந்து வெளியே போனதும் நீங்க தானாகவே கேட்டு தான் இங்கே சீட்டு வாங்கி இருக்கிறீர்கள். தாங்களே கேட்டுதான் மந்திரியாவும் ஆயிருக்கிறீங்க அப்ப ஒண்ணுமே கேக்கல ....அப்பாவுக்காக ஒண்ணும் நடக்கல ....அப்படி இருக்கிறப்போ இப்ப எலக்சன்ல யாரும் கூப்பிடலனாலும் நீங்களே போட்டு கேட்க போயிருக்கலாமே?


Sck
மே 24, 2024 06:26

மெத்த படித்த, நேர்மையானவர்களை மற்ற கட்சிகள் என்ன செய்கிறதோ அதையே தான் பாஜகவும் செய்கிறது. பரஜ்வால் ரேவண்ணா போன்றோர்களை பகிரங்கமாக காப்பாற்றுவது மற்றும ஒரு சாட்சி. இனி வரும் பொது தேர்வுகளை புரகணிக்க இது போன்ற காரணங்கள் போதுமே.


ஆரூர் ரங்
மே 24, 2024 12:26

பிரஜ்வால் மீது எடுக்கப்படும் போலீஸ் நடவடிக்கையை பிஜெபி எப்போது தடுத்தது? மட்டமான திரிப்பு. ஆனால் டெல்லி ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விஷயத்தில் காங்கிரஸ் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.


Kasimani Baskaran
மே 24, 2024 06:06

கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியை விட்டு நீக்குவதை விட்டுவிட்டு கேள்வி வேறு கேட்டு கேவலப்படுத்துகிறது பாஜக


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை