உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி

ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதந்திர நீதித்துறை முக்கியமானது என தெரிவித்து இருந்தனர். நீதிபதிகளில் ஒருவர் உங்கள் அரசால் ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். எனவே யார் 'உறுதியான நீதித்துறையை' விரும்புகிறார்?தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை வேட்பாளராக நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வந்தவர் யார்? ஏன் உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது?உங்கள் சொந்த பாவங்களுக்காக காங்கிரஸ் கட்சியின் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். ஜனநாயகத்தை கையாள்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்!. இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அருண் பிரகாஷ் மதுரை
மார் 29, 2024 14:48

நீதித்துறையில் எந்தவொரு களங்கமும் இல்லாமல் உண்மையாக,நேர்மையாக செயல்பட்ட நீதிபதிகள் எம்.பி ஆக்குவது தவறு என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்வோம் என்றால் விஜய் மல்லையா அவர்களை நீங்களும் உங்கள்து கூட்டணி கட்சியும் சேர்ந்து எதற்காக எம்பி ஆக்கினீர்கள். நீங்கள் யாரையாவது குற்றம் செய்தார்கள் என்று கூறினால் கண்டிப்பாக அந்த தவறு உங்களால் பல முறை செய்யப்பட்டு இருக்கும். அதனால்தான் நீங்கள் சரியான செயலைக் கூட உங்கள் தவறுகளால் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள் என்றே தோன்றுகின்றது.


ஆரூர் ரங்
மார் 29, 2024 14:03

எங்களுக்கு வேண்டியது அரசின், கொள்கை உத்தரவுகளை அப்படியே ஏற்கும் COMMITTED JUDICIARY நீதிமன்றங்களே? என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தது இந்திரா அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த ( தமிழர்) மோகன்குமாரமங்கலம். அரசே நீதிபதிகளை நியமித்தது. மாநிலம் விட்டு மாநிலம் டிரான்ஸ்பர் கூட ?செய்தது. இப்போது அக்கொள்கை செத்து விட்டதா?


Indian
மார் 29, 2024 12:44

வடக்கன் கட்சிக்கு ஓட்டு போட்டால் அதன் விளைவுகள் இப்போ தெரியாது பின்னரே தெரியும் பட்டு தெரிவதை விட படாமல் புரிந்துகொள்வது நல்லது /


ஆரூர் ரங்
மார் 29, 2024 14:55

தன்னை பூணூல் அணிந்த தத்தாத்ரேய கோத்திர பிராமணர் என அழைத்துக்? கொள்ளும் ராகுல் வடக்கரா இல்லை திராவிடரா? ஆரியரா இல்லை இட்டாலியரா?


ஆரூர் ரங்
மார் 29, 2024 12:31

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த பகருல் இஸ்லாமை இருமுறை MP ஆக்கியது உங்க கட்சி. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவுக்கு ராஜ்யசபாவுக்கு நியமித்தது உங்க கட்சி. பிறகு அவரையே சொந்த ஒடிஷா மாநில கவர்னராக ஆக்கியதும் உங்க சாதனை. எல்லாவற்றையும் மிஞ்சி மாவட்ட திமுக செயலாளரை நீதிபதியாக ஆக்கிய? பெருமையும் உங்க ஆட்சிக்கு உண்டு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை