உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் மகளிர் காங்., தலைவி  சவுமியா ரெட்டி

மாநில சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் மகளிர் காங்., தலைவி  சவுமியா ரெட்டி

கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி. இவரது மகள் சவுமியா ரெட்டி. 2018 சட்டசபை தேர்தலில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பா.ஜ., வேட்பாளர் ராமமூர்த்தியின் வெற்றியை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து தோற்றதால், சவுமியா ரெட்டி மனதளவில் சற்று சோர்ந்து போனார்.அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். பொறுப்பு ஏற்ற பின், சவுமியா ரெட்டி சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். அவருக்கு தந்தை ராமலிங்கரெட்டியும் பக்க பலமாக உள்ளார்.தலைவி ஆன பின், மாவட்ட வாரியாக மகளிர் அணியினரை சந்தித்து, ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுடன் பேசுகிறார். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், கர்நாடகா முழுதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார். தற்போது முக்கிய பிரமுகர்களுடன் தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.சவுமியா ரெட்டிக்கு முன்பு, மாநில தலைவியாக இருந்த புஷ்பா அமர்நாத், பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி, கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், சவுமியா ரெட்டி, எதிர்கட்சிகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி, மேலிட கவனத்தை ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுமியா ரெட்டிக்கு, துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவும் உள்ளது.இவருக்கு தற்போது 41 வயது தான் ஆகிறது. இளம் தலைவி என்பதால் அனைவரையும் ஒருங்கிணைத்தும், அரவணைத்தும் செல்வார் என்று கட்சி தலைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை காப்பாற்ற கடுமையாக உழைக்க சவுமியா ரெட்டியும் தயாராக உள்ளார்.- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி