உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்

காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்

பாலக்காடு; நெல்லியாம்பதியில், காட்டு யானை தாக்கியதில் தோட்டத்தொழிலாளி படுகாயமடைந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி வனம். இந்த வன எல்லையோடு சேர்ந்து, கேரள வனம் மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் தோட்டம் உள்ளன. இந்தத் தோட்டத்தில் பணியாற்றுபவர் அப்பகுதியைச் சேர்ந்த பழனிசாமி, 58.இந்நிலையில் பழனிசாமி, நேற்று காலை தோப்பிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது, காட்டு யானை தாக்கி துதிக்கையால் துாக்கி வீசி எறிந்தது.அவ்வழியாக வந்த தோட்டத்தொழிலாளிகள், காயமடைந்த பழனிசாமியை மீட்டு, ஆம்புலன்ஸின் உதவியுடன் நெம்மாராவில் உள்ள மருத்துவமனையிலும், தொடர் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக பாலக்காடு அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி