உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் வாங்கும் பொருட்களுக்கு இனி 1 % வரி

ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் வாங்கும் பொருட்களுக்கு இனி 1 % வரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இனி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஆடம்பர பொருள் வாங்கும்போது, டி.சி.எஸ்., எனப்படும் விற்பனையின்போதே வசூலிக்கப்படும் வரி 1 சதவீதம் விதிக்கப்படும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இது அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இனி 1 சதவீத டி.சி.எஸ்., வசூலிக்கப்படும். இந்த வரியை விற்பனையின்போது, நிறுவனமே வசூலித்து வருமான வரித் துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சொத்து மதிப்பு உடைய தனி நபர்கள், இது போன்ற ஆடம்பர பொருட்களுக்கு செலவு செய்வது அதிகரித்து வருவதால், இந்த வரியை அறிமுகப்படுத்துவதாக, கடந்தாண்டு பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தாலும், தற்போது தான் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகியுள்ளது. எனவே, ஏப்ரல் 22க்கு முன்னதாக வாங்கிய பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது.ஆடம்பர பொருட்களை வாங்கும் நபர்கள், பெரும்பாலும் ரொக்க பரிவர்த்தனையே மேற்கொள்வதால், வருமான வரித்துறையால் கண்காணிக்க முடியாமல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது டி.சி.எஸ்., விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனையாளர் வசூலிக்கும் வரியை, வாங்குபவர்களின் பான் கார்டு எண்ணை குறிப்பிட்டு, வருமான வரித் துறையிடம் டிபாசிட் செய்ய வேண்டும்.வருமான கணக்கு தாக்கல் செய்யும்போது, இனி வருமானத்தை குறைவாக காண்பித்து ஏமாற்ற முடியாது. ஏனென்றால், வருமானம் குறைவாக இருக்கும்போது எப்படி ஆடம்பர பொருட்களை வாங்க முடிந்தது என்ற கேள்வி எழும். இவ்வாறு செலுத்தப்படும் வரியை, கணக்கு தாக்கலின் போது செலுத்த வேண்டிய வரியை விட, டி.சி.எஸ்., வசூலிக்கப்பட்ட தொகை அதிகமாக இருந்தால், அதைக் குறிப்பிட்டு ரீபண்டு பெறலாம். கணக்கில் காட்டப்படாத ரொக்க பரிவர்த்தனைகளை தடுக்கவும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், வருமான வரி வசூலை அதிகரிக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம்

 கை கடிகாரம் கலை பொருட்கள் நாணயங்கள் படகு, ஹெலிகாப்டர் கூலிங்கிளாஸ்கள் கைப்பை, பர்ஸ் காலணிகள் விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள் ஹோம் தியேட்டர்  போலோ, பந்தய குதிரைகள்

வாகனங்கள்

ஏற்கனவே, 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலான விலை கொண்ட வாகனங்கள், வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் ஆகியவற்றுக்கு 1 சதவீத மூல வரி வசூலிக்கப்பட்டு வருகிறது

ரீபண்டு உண்டா?

உங்கள் வருமானம், வரி விதிக்கக்கூடிய ஆண்டு வரம்பான 4 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. எனவே, வருமான வரித் துறை, நீங்கள் செலுத்திய டி.சி.எஸ்., தொகையை முழுமையாக திருப்பித் தரும். உங்கள் வருமானம், வரி விதிக்கக்கூடிய வருடாந்திர வரம்பை விட அதிகமாக இருந்தால், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும். இருப்பினும், செலுத்தப்பட்ட டி.சி.எஸ்., தொகை, செலுத்த வேண்டிய மொத்த வரியை விட அதிகமாக இருந்தால், அதிகப்படியான டி.சி.எஸ்., தொகை, வருமான வரியை கழித்த பிறகு திரும்ப வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பாமரன்
ஏப் 24, 2025 09:59

செய்தியில் குறுப்பிட்டுள்ளது போல் ஏற்கனவே வாகனங்கள் வாங்க இந்த டிசிஎஸ் வசூலிக்கப்படுகிறது. பத்து லட்ச ரூபாய்க்கு மேல் ஒரே நேரத்தில் வாங்கப்படும் தங்க நகைகள் மற்றும் பத்து லட்சத்துக்கும் மேல் கட்டப்படும் கல்விக் கட்டணம் கூட இதில் வர வேண்டும். ஏற்கனவே வெளிநாட்டு படிப்புக்கு இருப்பது ஏன் உள்நாட்டுக்கு பொருந்தாது? மே பீ கலெக்ஷன் பர்ப்பஸ்க்காக வந்த நீட் கோச்சிங் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாலா? நாட்டில் புரையோடி உள்ள லஞ்ச பேமெண்ட் வரி விதிப்பிற்குட்பட்டது அப்பிடின்னு கூட அறிவிக்கலாம். நிம்மி காதுக்கு போகும்னு நம்புவோம்


GMM
ஏப் 24, 2025 08:10

நில பத்திர பதிவு, தங்க நகை, ஆடம்பர பொருட்கள் 50000 க்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்ய தடை விதித்தால் பல விவரங்கள் தானே பதிவாகும். மத்திய வங்கி போல் ஊழல் பண வங்கி அரசுக்கு தெரியாமல் தனியாக செயல் பட்டு வருகிறது. டிஜிட்டல் முறை வந்த பின் 500 ரூபாய் வாபஸ் பெற வேண்டும்.


Amar Akbar Antony
ஏப் 24, 2025 07:48

ஏன் ரியல் எஸ்டேட்டை விட்டுவிட்டிர்கள்? அதுதான் கொடுமையான கணக்கே இல்லாத வர்த்தகம். அங்கும் கோடிக்கணக்கில் பணம் நேரடியாக கையாளப்படுகிறது. தங்கமும் அதுபோலத்தான். நாடு உருப்படியாக இவற்றை கடிவாளத்திற்குள் கொண்டுவாருங்கள்.


பாமரன்
ஏப் 24, 2025 10:00

ஹவுசிங் லோன் இல்லாமல் நடக்கும் டைரக்ட் பேமெண்ட் சொத்து பரிவர்த்தனைகளை இந்த வரிக்கு உள்ளாக்கலாம்


J.Isaac
ஏப் 24, 2025 15:02

ரியல் இல்லாத ரியல் எஸ்டேட் எல்லாம் அரசியல்வாதிகள் கையில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை