உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தர பிரதேசத்தில் பஸ்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: பக்தர்கள் 10 பேர் பரிதாப பலி

உத்தர பிரதேசத்தில் பஸ்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: பக்தர்கள் 10 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில், பஸ்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டத்தில் பக்தர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். அந்த வகையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த பக்தர்கள் காரில் பிரயாக்ராஜ்க்கு சென்று கொண்டிருந்தனர். பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில், காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். பஸ்சில் மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கரை சேர்ந்த யாத்ரீகர்களும் இருந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N Sasikumar Yadhav
பிப் 15, 2025 12:08

தமிழகத்தில் திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் தினமும் நடக்கிற சட்டவிரோத செயல்களை பேசாமல் வாயை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள் உத்தரபிரதேசத்துக்கு பேச இந்த கோபாலபுர கொத்தடிமையாளர்கள்


தாஸ்
பிப் 15, 2025 10:30

என்னாது? 300 கிலோ மீட்டர் ட்ராஃபிக் ஜாம் கிளியர் ஆயி ஒரே ரோடில் ஸ்பீடா வந்தாங்களா?


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 17:55

சூப்பர் கேள்வி. ஆனால் உ பி நாக்பூர் மாடல் இப்படித்தான்.


நாகலிங்கம்
பிப் 15, 2025 10:28

நான் போய் சாட்டையாலடிச்சுக்கலாம்னு பாக்கறேன்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 15, 2025 09:53

மிகவும் பரிதாபம். உ பி அரசுப் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து. இது தமிழ் நாட்டில் நடந்திருந்தால், திராவிட மாடல் அரசில் இது சகஜம், உதய்ண்ணா, விடியல், டாஸ்மாக் - என்றெல்லாம் எழுதி தள்ளியிருப்பார்கள். பார்க்கலாம், என்ன எழுதுகிறார்கள் என்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை