உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மார்க்சிஸ்ட் அலுவலகத்தை நொறுக்க 10 பேர் போதும்; காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை

மார்க்சிஸ்ட் அலுவலகத்தை நொறுக்க 10 பேர் போதும்; காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபிசை அடித்து நொறுக்க 10 காங்கிரஸ் நிர்வாகிகளே போதும் என்று கேரள காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பினராயி பகுதியில் உள்ள வெண்டுட்டாவில் புதிதாக கட்டப்பட்ட காங்கிரஸ் அலுவலகத்தை மர்ம நபர்கள் சூறையாடினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், அலுவலகத்தின் கதவை தீவைத்தும் எரிக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.இருப்பினும், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், 'இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். ஒரே இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசை சூறையாட வேண்டும் என்றால், 10 காங்கிரஸ் தொண்டர்களே போதும்,' எனக் கூறினார். அவரது பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 14:19

நம்பிட்டோம்


Shankar
டிச 09, 2024 13:20

உலகில் தங்களது கருத்திற்கு எதிராக யாரும் பேசுவது கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிடிக்காத விஷயம். அதனால் அவர்கள் ஆளும் நாடுகளில் எதிர் கட்சியே இருக்காது. ஆனால் இவர்கள் தான் இந்தியாவில் எதிர் கட்சி சுதந்திரத்தை பற்றி குறைப்பார்கள். மாநில முதல்வர் ரொம்ப யோக்கியன்.வாடிக்கல் ராமகிருஷ்ணன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டவர் தானே. தங்களது கட்சியில் இருந்து வெளியேற்றியது குற்றமாக கருதி கொலை செய்த சம்பவங்கள் கேரளத்தில் ஏராளம்.


KRISHNAN R
டிச 09, 2024 09:17

கூட்டணி தான் ஆனா கூட்டணி இல்லை


Barakat Ali
டிச 09, 2024 08:57

கேரளாவில் அடித்துக்கொண்டாலும் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அணிதிரண்டவர்கள் இவர்கள் ..... கொள்கைக் குன்றுகள் ....


NellaiBaskar
டிச 09, 2024 08:40

No comments. நாங்கள் எல்லாம் இண்டியா கூட்டணி.


sankaranarayanan
டிச 09, 2024 08:26

இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அலுவலகத்தையும் சூறையாடுங்கள் நாட்டையும் சூறையாடுங்கள் மக்கள்தான் ஏமாந்த சோணகிரி


Ramalingam Shanmugam
டிச 09, 2024 11:09

சோரம் போகும் மக்கள் இருக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை


Rajagiri Apparswamy
டிச 09, 2024 08:23

இந்தி கூட்டணி முரண்பட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை