உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10,700 போலி நிறுவனங்களை காட்டி ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு

10,700 போலி நிறுவனங்களை காட்டி ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு

புதுடில்லி: ஜி.எஸ்.டி., ஏய்ப்பு குறித்து மறைமுக வரிக்கான மத்திய வாரிய அதிகாரிகள் நடத்திய சோதனையில், இதுவரை 10,700 போலி நிறுவனங்களும், 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டில்லியில், வாரியத்தின் உறுப்பினர் ஷசாங்க் பிரியா நேற்று கூறியதாவது: நாடு முழுதும் ஜி.எஸ்.டி., ஏய்ப்பை தடுக்கும் சிறப்பு சோதனைகள் நடக்கின்றன. இதில், 10,700 போலி ஜி.எஸ்.டி., பதிவுகளும்; 10,179 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜி.எஸ்.டி., பதிவை ஆதார் வாயிலாக உறுதிப்படுத்தும் நடைமுறை, 12 மாநிலங்களில் உள்ளது. அக்டோபருக்குள் மேலும் நான்கு மாநிலங்கள் செயல்படுத்த உள்ளன.இதனால், தமிழகம் உட்பட 20 மாநிலங்களில், ஆதார் வழி சரிபார்ப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும். மேலும், புதிதாக பதிவு செய்வோருக்கு வரித் துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஒரு மாதத்தில் ஏராளமான விலைப்பட்டியலை வெளியிடுகின்றனர். இதற்கு விரைவில் கட்டுப்பாடு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.ஒரு நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற மோசடிகளை தடுக்க, எல்லா வழிகளும் ஆராயப்படும். வரி ஏய்ப்பு, போலி ஜி.எஸ்.டி., பதிவு தொடர்பாக, கடந்த நிதியாண்டில் 1.13 லட்சம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.* ஜி.எஸ்.டி., சோதனை, ஆகஸ்ட் 16ல் துவங்கி, அக்., 15 வரை நடக்கிறது * மொத்தம் 67,970 பதிவுகளில் இதுவரை 39,965 ஆய்வு செய்யப்பட்டதில் 27 சதவீதம் செயல்படாதவை * 2023ல் நடந்த சோதனையில், 21,791 போலி நிறுவனங்கள், 24,010 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
செப் 25, 2024 09:29

ஜிஎஸ்டி வருவதற்கு முன் முக்கால்வாசி வணிகர்கள் பொய்க்கணக்கு மூலம் வரியைக் குறைத்துக் கட்டினர். பலர் வரி கட்டியதேயில்லை. இப்போ ஜிஎஸ்டி யை ஏமாற்றுவது மிகக் கடினமாக உள்ளதால் கடுப்பாகியுள்ளனர்.இப்பொழுது பிக்டேட்டா, செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராயப் படுவதால் ஏமாற்று வணிகர்கள் கடும் சோகம்.


அப்பாவி
செப் 25, 2024 09:26

இவிங்க கண்டுபிடிச்சது இவ்ளோ. அப்போ படாதது எத்தனை லட்சம்.கோடியோ?


R S BALA
செப் 25, 2024 07:50

இந்த வரி ஏய்ப்பில் அதிகாரிகளுக்கு துளியும் தொடர்பில்லையா வெளிய சொன்னா வெட்க கேடு பேசாம வாய மூடு..


குரு,நெல்லை
செப் 25, 2024 07:41

ஜிஎஸ்டி என்று ஒன்று வருவதற்கு முன்பு எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள். அவர்கள் பார்த்து கணக்கு காட்டியதுதான் இன்கம் டேக்ஸ். அதாவது ஒரு வருடம் ஒரு கோடி ரூபாய் வியாபாரம் செய்தால் குறைந்தபட்சம் 10 சதவீதம் அதாவது 10 லட்சமாக நிகரலாபம் பெற்றிருப்பார் . எல்லாவித செலவுகளும் கழித்தது போக . ஆனால் அவர்கள் காட்டியதோ 3 அல்லது 4லட்ச ரூபாய் மட்டுமே. அதாவது வருமான வரி உச்சவரம்பு 5 லட்சத்துக்குள்ளேயே 2015 வரை காட்டி இருந்தார்கள் . 2015-க்கு அப்புறம் தான் மெல்ல மெல்ல இந்த நிகர லாபம் ஆனது உயர்ந்து வணிக வணிகர்கள் உண்மையான கணக்குகளை வேறு வழியின்றி தாக்கல் செய்ய ஆரம்பித்தனர் . இது எல்லோரும் செய்வதில்லை. சில வணிகர்கள் குறிப்பாக இதில் சொல்ல வேண்டும் என்றால் ஜிஎஸ்டி பற்றிய புரிதல் வணிகர்களுக்கு ஏற்படுத்துவதை விட அதனை அவர்களை டேக்ஸ் கட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தும் ஆடிட்டர் மற்றும் இன்கம் டேக்ஸ் பிரக்டிஸ்னர் ஆகியோரையே சாரும். இவர்கள் வைத்தது தான் சட்டம் . இவர்களை நம்பித்தான் அனைத்து வியாபாரிகளும் உள்ளனர். ஒரு பத்து சர்வதே சதவீத வியாபாரிகள் மட்டுமே அனைவரும் புரிந்து கொள்ளும்படி அனைத்தையும் ஜிஎஸ்டி குறித்த அனைத்தையும் அறிந்தவர்களாக உள்ளனர் . பாக்கி 90 சதவீத வியாபாரிகள் புரிதல் இன்றி உள்ளனர் . அவர்களை நோக்கம் எல்லாம் டாக்ஸ் கட்ட வேண்டாம் அதிக லாபம் வேண்டும். இந்த ஜிஎஸ்டி வந்த பிறகு இவ்வளவு லட்சம் கோடி வருகிறது என்று கூறினோம். இதற்கு முன்னால் இதே போல வர்த்தகம் இந்தியாவில் நடந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் அந்த பணம் எங்கே போனது. இதை கேட்க இங்கு யாவருக்கும் தைரியம் இல்லை . இந்த பணத்தில் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமான வரி இழப்புகள் பல்லாயிரம் கோடி சொல்லப் போனால் பல லட்சம் கோடி . இன்னும் சற்று ஒழுங்கு படுத்தினால் மிகச் சிறப்பு கண்டிப்பாக இந்தியா வல்லரசாக வரும்.


R.RAMACHANDRAN
செப் 25, 2024 06:59

இந்த நாட்டில் அதிகார வர்க்கத்திற்கு எலும்புத் துண்டு போட்டு எதையும் செய்கின்றனர் கொள்ளையர்கள்.அரசாங்கத்தில் வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக கடமை ஆற்றல் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு விசுவாசமாக இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.ஆதார பூர்வமாக புகார்கள் செய்தாலும் குற்றவாளிகளிடம் பங்கு பெறுவதால் காப்பாற்றுவதையே தொழிலாக கொண்டுள்ளது அதிகார வர்கம்.இந்த நாடு நிச்சயம் முன்னேறாது.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2024 05:50

10,700 போலி ஜி.எஸ்.டி., பதிவுகளும் 10,179 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது. எந்த மாநிலத்தில் என்று சொல்ல சொல்லுங்கள்.


முக்கிய வீடியோ