உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10,700 போலி நிறுவனங்களை காட்டி ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு அக்., 15 வரை சோதனை தொடரும்

10,700 போலி நிறுவனங்களை காட்டி ரூ.10,000 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு அக்., 15 வரை சோதனை தொடரும்

புதுடில்லி, ஜி.எஸ்.டி., ஏய்ப்பு குறித்து மறைமுக வரிக்கான மத்திய வாரிய அதிகாரிகள் நடத்திய சோதனையில், இதுவரை 10,700 போலி நிறுவனங்களும், 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டில்லியில், வாரியத்தின் உறுப்பினர் ஷசாங்க் பிரியா நேற்று கூறியதாவது:நாடு முழுதும் ஜி.எஸ்.டி., ஏய்ப்பை தடுக்கும் சிறப்பு சோதனைகள் நடக்கின்றன. இதில், 10,700 போலி ஜி.எஸ்.டி., பதிவுகளும்; 10,179 கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.ஜி.எஸ்.டி., பதிவை ஆதார் வாயிலாக உறுதிப்படுத்தும் நடைமுறை, 12 மாநிலங்களில் உள்ளது. அக்டோபருக்குள் மேலும் நான்கு மாநிலங்கள் செயல்படுத்த உள்ளன. இதனால், தமிழகம் உட்பட 20 மாநிலங்களில், ஆதார் வழி சரிபார்ப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும்.மேலும், புதிதாக பதிவு செய்வோருக்கு வரித் துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஒரு மாதத்தில் ஏராளமான விலைப்பட்டியலை வெளியிடுகின்றனர். இதற்கு விரைவில் கட்டுப்பாடு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.ஒரு நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற மோசடிகளை தடுக்க, எல்லா வழிகளும் ஆராயப்படும். வரி ஏய்ப்பு, போலி ஜி.எஸ்.டி., பதிவு தொடர்பாக, கடந்த நிதியாண்டில் 1.13 லட்சம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.1ஜி.எஸ்.டி., சோதனை, ஆகஸ்ட் 16ல் துவங்கி, அக்., 15 வரை நடக்கிறது2 மொத்தம் 67,970 பதிவுகளில் இதுவரை 39,965 ஆய்வு செய்யப்பட்டதில் 27 சதவீதம் செயல்படாதவை3 2023ல் நடந்த சோதனையில், 21,791 போலி நிறுவனங்கள், 24,010 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி