உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆயிரம் பேர்... போலீசாரின் துப்பாக்கி பறிப்பு... மே.வங்க கலவரம் குறித்து வெளியான பகீர் தகவல்

10 ஆயிரம் பேர்... போலீசாரின் துப்பாக்கி பறிப்பு... மே.வங்க கலவரம் குறித்து வெளியான பகீர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்தின் போது திடீரென 10 ஆயிரம் பேர் ஒன்று கூடியதும், போலீசாரின் ஆயுதங்களை அவர்கள் பறித்து சென்றதாக உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அரசு சொத்துகள், போலீஸ் வாகனங்கள் , தனி நபர்களின் வாகனங்களும் தீவைக்கப்பட்டன. சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5nmrqp20&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்கலவரம் தொடர்பாக கோல்கட்டா ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மாநில அரசு 34 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கடந்த 11ம் தேதி கலவரம் எப்படி நடந்தது என விளக்கிக் கூறப்பட்டு உள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: முர்ஷிதாபாத்தின் ஜாங்கிபூர் பகுதியில் 4 ஆயிரம் - 5 ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் போலீசை தாக்கி ஆயுதங்களை பறித்துச் சென்றது. பொதுப்பணித்துறை மைதானத்தில் 8 -10 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். அவர்களில் 5 ஆயிரம் பேர் திடீரென தேசிய நெடுஞ்சாலை சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோசமாக நடந்து கொண்ட அவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டே போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இரும்பு கம்பிகள், மரக்கட்டைகள், குச்சிகளாலும் தாக்கினர்.அவர்களில் ஒருவன், சப்இன்ஸ்பெக்டர் ஒருவரின் பிஸ்டலை பறித்துச் சென்றான். இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டிய நிலை ஏற்பட்டது.142 சுற்றுக்கள் ரப்பர் குண்டுகளையும், 10 முறை கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசார் வீசினர். 8 முறை புகை குண்டுகளையும் வீசினர். கோஸ்பாரா பகுதியில் ஹிந்து குடும்பத்தினரின் வீடுகளை சூறையாடினர். ஜாப்ராபாத் நகரில் 2 பேர் கொல்லப்பட்டனர். இக்கலவரம் தொடர்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Padmasridharan
ஏப் 18, 2025 11:32

நினைத்தாலே "கண்ணீர்" வருதே


Karthik
ஏப் 18, 2025 10:05

மிகச்சிறந்த கதை, வசனம், இயக்கம். உரிமை :- மம்தா Ban


Kasimani Baskaran
ஏப் 18, 2025 08:02

ஓட்டுக்காக வங்கதேசத்தவர்களை தாராளமாக உள்ளே விட்டதன் பலனை நாடு அனுபவித்தே ஆகவேண்டும்.


Rangarajan Cv
ஏப் 18, 2025 17:13

Agreed. Difficult to filter as those guys penetrated all over India. Only way is to establish antecedents, money transfer, property ownership outside india


Kanns
ஏப் 18, 2025 06:25

Why Reserve & Armed Police Not Sent With Shooting Orders Against AntiNation Anti-Humanity AntiNativeHindus Islamic-Jihadists by MinorityAppeasingMamtaBegum ????? Arrest& Prosecute her for Genociding NativeHindus


subramanian
ஏப் 18, 2025 03:37

நீதிமன்றம், நீதிபதிகள் பொத்திக்கொண்டு இருப்பார்கள். நாட்டை பிடித்த பீ.டை விலக வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


Raj S
ஏப் 17, 2025 23:59

திருட்டு திராவிடன் ஒருத்தனும் இந்த பகுதிக்கு வரமாட்டார்கள்...


Thetamilan
ஏப் 17, 2025 23:50

இதில் பாஜவின், இந்துமதவாதிகளின் பங்கும் இருக்கும்


அப்பாவி
ஏப் 17, 2025 23:00

கலவரத்தில் ஒரு பத்துப்பேரை போட்டுத் தள்ளியிருக்கலாம். ஆனால் உடனே நீதிமன்றங்கள் பொங்கிட்டு வந்துரும்.


KRISHNAN R
ஏப் 17, 2025 22:16

அக்கா...வின் .... ஆட்சி


krishna
ஏப் 17, 2025 21:54

MIRUGA MOORGANIN VOTTU PICHAIKKU INDIAVAUUM HINDHUKKALAYUM ADAGU VAITHU PADHAVIYIL ULLA MAMATHA BEGUM PONDRA KODURA MIRUGAM VAAZHNAAL MUZHUVADHUM JAILIL KALI THINGA VENDUM.MODI ARASU INDHA MIRUGAM MATTRUM DRAVIDA MODEL MAFIA KUMBAL MEEDHU ORU ACTIONUM EDUKKAMAL IRUPPADHU ULAGA MAHA KOZHAITHANAM.


புதிய வீடியோ