உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.10,601 கோடி செலவில் அசாமில் உரத் தொழிற்சாலை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.10,601 கோடி செலவில் அசாமில் உரத் தொழிற்சாலை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: அசாம் மாநிலம் நம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் புதிய உரத் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசின் அறிக்கை; பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அசாமில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் ரூ. 10,601 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய உரத்தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா - யூரியா வளாகம் அமைப்பதற்கான இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்தேச காலம் 48 மாதங்கள் ஆகும்.அசாம் அரசு 40%, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக நிறுவனம்: 11%, ஹிந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன நிறுவனம் 13%, தேசிய உர நிறுவனம் 18%, இந்திய ஆயில் நிறுவனம் 18% என்ற விகிதத்தில் கடன் ஈவு பங்கு விகிதம் இருக்கும்.இந்தத் திட்டம் உள்நாட்டில் குறிப்பாக வடகிழக்கு பகுதியில் யூரியா உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இது வடகிழக்கு, பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிகரித்து வரும் யூரியா உரங்களின் தேவையை பூர்த்தி செய்யும். நாம்ரூப் 4 அலகு நிறுவப்படுவது அதிக எரிசக்தி திறன் கொண்டதாக இருக்கும். இப்பகுதி மக்களுக்கு கூடுதல் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளுக்கான வழிகளையும் இது ஏற்படுத்தும். நாட்டில் யூரியா உற்பத்தியில் தற்சார்பு என்ற தொலைநோக்கு பார்வையை அடைய இது உதவும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல, ரூ.4,500.62 கோடி செலவில் ஜவஹர்லால் நேரு துறைமுகம் (பகோட்) தொடங்கி மகாராஷ்டிராவில் சவுக் (29.219 கிலோமீட்டர்) வரை 6 வழி அணுகல் கட்டுப்பாட்டு பசுமை (கிரீன்ஃபீல்ட்) அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை