உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்கு: தேடப்படும் 11 பயங்கரவாதிகள் இவர்கள்தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட மேலும் 11 பேர் யார், யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. ஜம்முகாஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளூர் மக்கள் பலரும் உதவியிருக்கலாம், உள்ளூர் பயங்கரவாதிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடக்காது என்று உறுதியுடன் நம்பி உள்ள உளவுத்துறை மேலும் 11 பயங்கரவாதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த 11 பேரும் பஹஸ்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள். அவர்கள் யார் என்ற பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. 11 பயங்கரவாதிகளுக்கு வயது 20 முதல் 40 வயது வரை இருக்கும். பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு உதவி இருக்கின்றனர். ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 11 பேரில் 3 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 5 பேர் லஷ்கர் இ தொய்பா, 3 பேர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள். அவர்களின் முழு பெயர் விவரங்கள்; அடில் ரஹ்மான் டென்ட்டூ: 21 வயது கொண்ட இவன், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் 2021ம் ஆண்டு தம்மை இணைத்துக் கொண்டான். லஷ்கர் இ தொய்பாவின் சோபூர் மாவட்ட தலைவன் என்று கூறிக்கொள்பவன்.ஆசிப் அகமது ஷேக்(வயது28); இவர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். அந்த இயக்கத்தின் அவந்திபுரா தலைவன் என்று கூறிக்கொள்பவன். 2022ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான்.ஜூபைர் அகமதுவனி(வயது39); இவனுக்கு அபு உபைதா, உஸ்மான் என்ற இருவேறு பெயர்களும் உண்டு. ஹிஸ்புல் முஜாகதீன் இயக்கத்தின் அனந்த்நாக் மாவட்ட தலைவன் என்று கூறிக்கொள்பவன். ஏ பிளஸ் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். 2018ம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினருக்கு எதிரான தாக்குதலில் தொடர்பு உடையவன்.ஹரிஷ் நசிர் (வயது 20); 2023 முதல் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இருப்பவன்.நசீர் அகமதுவனி(வயது 21); 2019 முதல் சோபியான் பகுதியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தொடர்புடையவன். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் உள்ள இவன், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவன்.ஆமிர் அகமது தர்; 2023ம் ஆண்டு முதல் சோபியான் பகுதியில் தமது பயங்கரவாத நடவடிக்கையை தொடங்கியவன். இவனும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் இருந்த படியே பாக். பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவன்.ஆசிப் அகமது கண்டே(வயது 24) 2015ம் ஆண்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்தவன். ஆமிர் நசிர்வனி(வயது 20); 2024ம் ஆண்டு முதல் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் செயல்பட்டு வருபவன். புல்வாமா பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவன்.யாவர் அகமதுபட்; இவரின் நடாட்டம் என்பது புல்வாமா பகுதியில் தான். 2024ல் முதல் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தில் செயல்பட்டு வருபவன். ஹரூண் ரஷித் கனய்(வயது 32); அனந்த்நாக் பகுதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி. 2018ம் ஆண்டுவாக்கில், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயற்சி எடுத்தவன். தெற்கு காஷ்மீர் பகுதிக்கு அண்மையில் வந்து சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாகிர் அகமது கனி(வயது 29); இவன் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் குல்ஹாம் மாவட்டத்தின் முக்கிய பயங்கரவாதி. பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துபவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
மே 14, 2025 19:10

தீவிரவாதத்தை கையாளும் பொழுது இஸ்ரேல் பிளே புக் போன்ற கடுமையான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள், உதவி செய்பவர்கள், ஸ்லீப்பர் செல்களாக வாழ உதவுபவர்கள் தீவிரவாதிகளாகவே கருதப்பட வேண்டும்.


spr
மே 14, 2025 17:37

"இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளூர் மக்கள் பலரும் உதவியிருக்கலாம், உள்ளூர் பயங்கரவாதிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடக்காது " இதில் எந்த ஐயமும் இல்லை. அதோடு மோடியின் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு கொண்ட காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளில் சிலரும் இந்தியாவை அவமதிக்கிறார்கள் தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறார்கள் இந்திய இறையாண்மையை ஏளனம் செய்கிறார்கள் போதை மருந்து உற்பத்தி, கடத்தல் விற்பனை செய்பவர்களுக்கு உதவும் திமுக போன்ற கட்சிகள் காசுக்காக இந்த துரோகிகள் நாட்டில் நடமாட உதவுகிறார்கள் இவர்கள் அனைவரையும் அறவே அழிக்காமல் மோடி மௌனம் காக்கிறார். இன்னமும் ஆண்டவன் இந்தியாவை யாரோ ஒரு சில நல்லவர்களுக்காக, இந்திய வீரர்கள் மூலம் காப்பாற்றுகிறான்.


என்றும் இந்தியன்
மே 14, 2025 16:42

அவர்களையும் அவர்களுக்கு தங்க திங்க தூங்க செல்ல உதவியவர்களுக்கும்....


Mohan
மே 14, 2025 15:18

அய்யா அங்கேயும் இங்கயும் தேடுறத விட்டுட்டு எங்க டுமிழ்நாட்டுல தேடுங்கய்யா ..பூரா தேச துரோகிகளும் இங்க தான் இருக்காங்க ...இன்னொரு காஷ்மீர் இந்த ரெண்டும் தயவு செஞ்சு இங்க ஒரு கண்ணும் பெங்கால் மேல இன்னொரு கண்ணும் இருக்கட்டும் ...


Mithun
மே 14, 2025 14:47

இந்தியாவின் பல ஏர்போர்ட்களில் கிரௌண்ட் ஹண்ட்லிங் நிர்வகிப்பது நம் நாட்டின் பரம எதிரியான துருக்கி உடைய கம்பெனியான சிலேபி. அவர்கள் மூலமாக எளிதாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருப்பர்.


lana
மே 14, 2025 14:32

இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் ஏதோ ஒருவரால் சுட்டுக் கொலை செய்ய படுவார்கள் இன்னும் சில வருடங்களில். உபயம் அஜித் doval


Raman
மே 14, 2025 14:24

We all wait for the good news. Jai Hind


Kundalakesi
மே 14, 2025 14:05

இவங்க புகுந்த வீடும் நாடும் உருப்படாது. போட்டு தள்ளுங்க


ராமகிருஷ்ணன்
மே 14, 2025 13:36

இள வயது என்று கருதாமல் இவர்கள் காஷ்மீரில் அல்லது பாக்கிஸ்தானில் இருக்கும் பட்சத்தில் அவர்களெ தங்கியிருந்த வீட்டில் சமாதியாக வேண்டும். இங்கு அவர்களுக்கு உதவுபவர்களும் குடும்பத்தோடு சமாதியாக வேண்டும்


ராமகிருஷ்ணன்
மே 14, 2025 13:32

தேடப்படும் பயங்கரவாதிகளை கொல்வதற்கு போர் நிறுத்த விதிகளை மதிக்க வேண்டியதில்லை. பாக்கிஸ்தானில் எங்கிருந்தாலும் விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி கொல்லுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை