உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.12,000 கோடி போதை பொருள் பறிமுதல் தெலுங்கானாவில் 13 பேர் கைது

ரூ.12,000 கோடி போதை பொருள் பறிமுதல் தெலுங்கானாவில் 13 பேர் கைது

ஹைதராபாத் : மஹாராஷ்டிரா போலீசார், தெலுங்கானாவில் நடத்திய அதிரடி சோதனையில், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெபத்ரோன்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, மென்பொறியாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த மிரா ரோடு போலீசார், சில நாட்களுக்கு முன், 200 கிராம் போதை பொருளை ஒருவரிடம் இருந்து கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், தெலுங்கா னாவில் இருந்து போதை பொருள் கிடைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக மிரா ரோடு போலீசார், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதி ரடி சோதனை நடத்தினர். விசாரணையில், தெலுங்கானாவில் மிகப்பெரிய குழு அமைத்து போதை பொருள் கடத்தியது தெரியவந்தது. மேலும் இந்த, 'நெட்வொர்க்' வெளிநாடுகள் வரை பரவியிருப்பதால், தொடக்கப்புள்ளியை அறிய முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சேரலபள்ளி பகுதியில் செயல்படும் தொழிற்சாலையில், மிரா ரோடு போலீசார் போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் சென்று நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, மெபத்ரோன் போதை பொருள் தயாரிக்க பயன்படும், 32,000 லிட்டர் மூலப் பொருளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 12,000 கோடி ரூபாய். போதை பொருள் தயாரிப்பில் மூளையாக செயல்பட்ட மென்பொறியாளர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை