உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்கனில் இருந்து டில்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து பயணம்: 13 சிறுவன் விபரீத செயல்

ஆப்கனில் இருந்து டில்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து பயணம்: 13 சிறுவன் விபரீத செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் டில்லி இந்திரா காந்தி விமானத்தில் தரையிறங்கிய பிறகு ஒரு சிறுவன் செய்த வேலை விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rxlnrxt5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்ட 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் டில்லியை வந்தடைந்தான். விசாரணையில் 13 வயது சிறுவன் காபூல் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டது தெரியவந்தது.பின்னர் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு டில்லியில் தரையிறங்கியது தெரியவந்தது. விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்த சிறுவன், ஒரு ஆர்வத்தில் இப்படி செய்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் நகரைச் சேர்ந்த அந்த சிறுவன், விமான ஊழியர்களால் கைது செய்யப்பட்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டான். பின்னர் அந்த சிறுவனிடம் விசாரணை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்ட அதே விமானத்தில் சிறுவன் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.சிறுவன் என்பதால் சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி விமான நிலைய அதிகாரிகள் அலட்சியம் குறித்து சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Moorthy
செப் 24, 2025 15:20

சிறுவன் சொல்வது சுத்த பொய் 10000 அடி உயரத்திலேயே ஆக்ஸிஜன் குறைய ஆரம்பித்து விடும். 30000 அடி உயர பயணத்தில் ஆக்ஸிஜன் பூஜ்யம்


Natchimuthu Chithiraisamy
செப் 24, 2025 11:42

தப்பித்து விட்டான் வரும் காலத்தில் கண்டிப்பாக விமான கடத்தல் செய்வான். நம்மாளுங்க செய்திருந்தால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி.


Senthoora
செப் 23, 2025 18:21

கூலி பட டைரக்டர் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து இப்படி அனுப்பி பாகிஸ்தானில் தீவிரவாதியைகளை வேட்டையாட படம் எடுப்பார், அப்போ இந்த பையனுக்கு ஒரு விட்பனையில் ஒரு கட்டிங் கொடுக்கணும்.


Chandhra Mouleeswaran MK
செப் 23, 2025 16:23

கண்டுபுடுச்சிட்டாருப்பா கொளத்தூரில கொசு மூச்சா பொனாக்கூட அதுக்கும் பிஜேபி தான் காரணம் லாண்டிங் கியர் கம்பார்ட்மெண்ட் ஒன்றும் சிங்கிள் ரூம் வீடு இல்லை சக்கரத் தொகுப்பு உள்ளே இழுத்துக் கொண்ட பின், அதில் கொஞ்சம் கிரீஸ் வேண்டுமானால் இருக்க முடியும் தம்புடு இப்போதுதான் "கிரிஷ்" படத்தைப் பார்த்திருப்பான் அதனால் மாட்டியதும் ரீல்ஸ் விட்டிருக்கிறான் ப்ளேனிற்குள் இருந்ததை வெளியில் சொன்னால் விமான தளப் பாதுகாப்பு இன்னும் உடைசல் என்பது தெரிந்து விடும் என்று விமான நிலைய அதிகாரிகள் அவனுடைய ரீல்ஸிற்கு ஷார்ட்ஸ் விட்டிருக்கிறார்கள் விட்டால் "அதில் காதலியுடன் இரண்டு நாட்களாக ஒளிந்திருந்தேன்" என்று குல்லா போடுவான்கள். இது எதிர்காலக் கடத்தல்களுக்கு அந்தத் தீவிர வியாதியஸ்தர்கள் நடத்திய ஒத்திகை காபூலைத் தேர்ந்தெடுத்திருப்பதே அதைக் காட்டுகிறது அங்கு செக்யூஊஊஊரிட்டி எல்லாம் ஒன்றிரண்டு கிழவாடி வாட்ர்மேன்கள் தானே?


Rasheed Rasheed K
செப் 24, 2025 10:27

superb


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2025 15:53

இங்க வந்து வளர்ந்து திருமணம் செய்து நிறைய குட்டி போடுவான் ...... பாஜகவும் இன்னும் முப்பது வருடங்கள் கழித்து ஹிந்து வாக்கு வங்கியைக் கவர [ஊடுருவல் காரர்களை விரட்டுவோம்] என்று சூளுரைக்கும் .......


Pandi Muni
செப் 23, 2025 16:31

நல்ல வேலையா ஒரு ஊரே உருவாகாம தப்பிச்சிட்டோம்


Venkatesan Srinivasan
செப் 23, 2025 17:40

யாரு அந்த கால இரயில் கழிப்பறை பயணி மாதிரியா?


Vasan
செப் 23, 2025 15:38

சிறுவனை திருப்பி அனுப்பியதாவது ஒரு இருக்கை கொடுத்தா அல்லது மறுபடியும் லேண்டிங் கியர் இலா ?


Vasan
செப் 23, 2025 15:35

This might be a safer travel than seat number 11A.


vee srikanth
செப் 23, 2025 15:06

Pardeep Saini survived a flight from New Delhi, to London in October 1996


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 23, 2025 13:05

இதே நேரம் இந்தியாவிலிருந்து ஒரு சிறுவன் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தால் அங்கேயே அவன் தலையை வெட்டி கால்பந்து ஆடியிருப்பார்கள். இந்தியா இந்தியாதான்.


Bangalore Tamilan
செப் 23, 2025 12:30

வாய்ப்புகள் இருக்கு சார். விமானம் புறப்பட்டதும் வண்டியின் சக்கரங்கள் உள்ளே இழுத்துவிடும். எனவே அந்த சிறுவன் விமானத்தில் உள்ளேதான் இருந்திருக்க வேண்டும். லெண்டிங் சமயத்தில் அவன் வெளியே வந்திருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதில் உங்களுக்கு வேறு கருத்திருந்தால் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள விழைகிறேன். நன்றி


duruvasar
செப் 23, 2025 15:34

சக்கரங்கள் உள்ளே இழுத்துக்கொள்ளும் ஆனால் அதற்குண்டான ஸ்பெஸ் மட்டும்தான் இருக்க வாய்ப்பு என எண்ணுகிறேன் . ஒரு 13 வயது சிறுவனின் உடம்பை வைத்துக்கொள்ளுமளவுக்கு ஸ்பெஸியஸாக இருக்குமா எனபதை விவரம் தெரிந்தவர்கள்தான் விளக்கமுடியும்.


சமீபத்திய செய்தி