உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்டவிரோத குடியேற்றம்; வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தல்!

டில்லியில் சட்டவிரோத குடியேற்றம்; வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாட்டினர் 8 பெண்கள் உட்பட 132 பேர் நாடு கடத்தப்பட்டனர்.டில்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், டில்லியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கி உள்ளதாகவும் அவர்களை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்து இருந்தன.இதனையடுத்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையின் போது சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் குறித்து அடையாளம் காண வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.இந்நிலையில், டில்லி போலீசார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதுடன், ஆவணங்களையும் சோதனை மேற்கொண்டனர். அதன்படி, 2024ம் ஆண்டு டில்லியில் சட்டவிரோதமாக குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தப்பட்டனர். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அங்கித் சிங் கூறியதாவது: டில்லியில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாட்டினர் 132 பேர் நாடு கடத்தப்பட்டனர். அவர்களிடம் ஆவணங்கள் ஏதுமில்லை.நாடு கடத்தப்பட்டவர்களில் 116 பேர் நைஜீரியர்கள், ஐவரி கோஸ்ட்டில் இருந்து 7 பேர், கினியா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தலா மூன்று பேர், கானா மற்றும் உகாண்டாவில் இருந்து தலா இரண்டு பேர், செனகலில் இருந்து ஒருவர் என மொத்தம் 132 ஆவர். இதில் எட்டு பெண்களும் அடங்குவர். அவர்களில் ஐந்து நைஜீரிய பெண்களும், மூன்று உஸ்பெக் பெண்களும் அடங்குவர். நாடு கடத்தப்பட்டவர்கள் குடிசைகள், அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாழ்ந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Karthikeyan Palanisamy
ஜன 24, 2025 22:46

யாரு உப்பிஸ்சா டெல்லில பிஜேபி தான் எதிர்க்கட்சி....


சாண்டில்யன்
ஜன 05, 2025 20:09

தேர்தல் வருதுல்ல நல்ல வோட்டு கள்ள வோட்டெல்லாம் எதிர் கட்சிக்குத்தான் போகும்னு முழுசா நம்புது பிஜேபி அதனால வெளி மாநிலத்தவர்களை வெளியேற்ற பகீரத பிரயத்தனம் பண்றாங்கோ...


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2025 18:26

குறிப்பிட்ட நபர்கள் என்னம்மா ஹிந்துப்பெயரில் உலாவிட்டு ஒருமார்கமா பதிவிடுகிறார்கள்.. ஹா ஹா என்னே உங்க மார்க்க புத்தி .. உங்க பதிவிலேயே புரிஞ்சிடும் யாருக்கு சாமரம் வீசுகிறீர் என்று. ரவை நியாய தர்மம் கிடையாது .. ரவை நாட்டுப்பற்று கிடையாது . கள்ளக்குடியேறிகள் எப்படி உலாவினால் உங்களுக்கு என்ன போச்சு எல்லாம் ஒரு மார்க்கம் தானே என்பது உங்க தப்பு கணக்கு


என்றும் இந்தியன்
ஜன 05, 2025 17:24

எங்கெங்கு முஸ்லீம்களின் ஆட்சி நடக்கின்றதோ அங்கு இது ஸர்வாசாதாரணம் உம் .ஒர்ஸ்ட் Bengal , கர்நாடக, கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் Christians not Singh


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2025 14:34

மூன்றே இடம் ஒன்னு தமிழகம் இன்னொன்னு கர்நாடக்க்கம் விடக்கூடாதது வெஸ்ட் பெங்கால் இங்க தான் புற்றீசல் போல குறிப்பிட்ட மக்கள் வந்துள்ளனர். எல்லாம் வோட்டு பிச்சை எடுக்கும் அரசியல் அல்லக்கைகள் கைங்கரியம் ..


சாண்டில்யன்
ஜன 05, 2025 17:19

இந்திய எல்லையில் அமீத் ஷாவின் கண்ட்ரோலில் நவீன எந்திர துப்பாக்கிகளுடன் எல்லை பாதுகாப்பு படை என்று ஒன்று உள்ளது தெரியாதோ? நேற்று அந்த மாநில முதல்வர் அந்த மத்திய படையினர் ஊடுருவல்காரர்களை அனுதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளாரே எப்படியெல்லாம் குடைச்சல் கொடுங்கறாங்கப்பா இப்பயும் கேவலமான அரசா


Kumar Kumzi
ஜன 05, 2025 14:04

சார் மொதல்ல திருப்பத்தூருக்கு வாங்க பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகள் எல்லாம் இங்க தா குட்டி போட்டுட்டு இருக்கானுங்க


Ramesh Sargam
ஜன 05, 2025 12:20

தமிழகத்தில் திருட்டு ரயில் ஏறிவந்தவர்களை அன்றே நாடு கடத்தியிருந்தால், இன்று தமிழகம் ஒரு பூங்காவனமாக இருந்திருக்கும்.


Nandakumar Naidu.
ஜன 05, 2025 12:17

நன்றாக தேடுங்கள் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் இருப்பார்கள். அனைவரையும் நாடு கடத்த வேண்டும்.


visu
ஜன 05, 2025 12:09

வங்க தேசத்தவர்களை காணோம் ஏனெனில் அவர்கள் உள்ளூர் புல்லுருவிகள் துணையோடு அவர்கள் வாழும் பகுதியிலேயே இருப்பர் உள்ளே நுழைந்து கணக்கு எடுக்கவே சிரமம்


Shankar
ஜன 05, 2025 11:27

நம்நாட்டில் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் நாடு முழுவதிலும் பரவிக்கிடக்கின்றார்கள். அவர்களை முதலில் கண்டறிந்து நாடுகடத்துங்கள்.


சாண்டில்யன்
ஜன 05, 2025 13:35

இது குற்றச்சாட்டு ஆனால் இந்த செய்தியில் நாடு கடத்தப்பட்டவர்களில் 116 பேர் நைஜீரியர்கள், ஐவரி கோஸ்ட்டில் இருந்து 7 பேர், கினியா மற்றும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த தலா மூன்று பேர், கானா மற்றும் உகாண்டாவில் இருந்து தலா இரண்டு பேர், செனகலில் இருந்து ஒருவர் என மொத்தம் 132 ஆவர். என்று புள்ளிவிவரம் கொடுத்து உள்ளது பங்களாதேசிகளை பற்றி ஒன்றும் இல்லை டில்லி போலீசார் இப்போதைக்கு வில்லங்கம் வேண்டாம் என்று விட்டுட்டுட்டார்களோ


சாண்டில்யன்
ஜன 05, 2025 17:12

அப்படியானால் புடிச்சுக்க குடுக்க வேண்டியதுதானே புடிச்சுக்க குடுக்க பயமானால் குறைந்த பட்சம் போலீசுக்கு போட்டுக் கொடுக்கலாம் INFORMER தடையில்லை


முக்கிய வீடியோ