உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கோல்கட்டா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டாவில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். இது பற்றிய விவரம் வருமாறு: புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.கொளுந்துவிட்டு எரிந்த தீயை அவர்கள் அணைக்கும் பணியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அதன் பின்னர் ஹோட்டலில் அவர்கள் சென்று பார்த்த போது உள்ளே, வெவ்வேறு அறைகளில் 14 பேர் பலியானதை கண்டறிந்தனர். இதுகுறித்து பேசிய போலீஸ் கமிஷனர் மனோஜ் வர்மா, மொத்தம் 14 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். பலர் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது என்றார்.இதனிடையே இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு, குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
ஏப் 30, 2025 08:56

பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு / தீ, மின்சாரமும் மக்களை விழுங்கி கொண்டிருக்கின்றன சமீப காலத்தில். ஓம் நமச்சிவாய நமஹ


அன்பே சிவம்
ஏப் 30, 2025 08:53

ஓம் சாந்தி ஓம் சாந்தி


S Srinivasan
ஏப் 30, 2025 08:47

Kolkata hotels are unsafe, there are no proper regulations safety measures followed, bribes are very high to compromise rules, so when you check in pl be careful see everything and check in


Svs Yaadum oore
ஏப் 30, 2025 08:39

பாதிக்கப்பட்ட தமிழர்களை விடியல் தனி விமானம் அனுப்பி மீட்டு வர செய்வார் ....தமிழனுக்கு பாதிப்பு என்றால் விடியல் சும்மா விட்டு விட மாட்டார்கள் ....


Svs Yaadum oore
ஏப் 30, 2025 08:36

தமிழ் நாடு முன்னேறிய மாநிலம். வடக்கன் மாநிலம் எல்லாம் படிப்பறிவு இல்லாத மாநிலம். ஆனால் மேற்கு வங்கம் விடியல் கூட்டணி மேடம் ஆட்சி செய்யும் மாநிலம். அதனால் வடக்கன் மாநிலமாக இருந்தாலும் மேடம் ஆட்சி செய்யும் மாநிலம் மத சார்பின்மையாக முன்னேறிய மாநிலமாக விடியல் பகுத்தறிவில் மாறி விடும் ....


raja
ஏப் 30, 2025 08:28

இது சதி வேலையாக கூட இருக்க கூடும்... இறந்தவர்கள் அனைவரும் இந்துக்களா என்று விசாரிக்க வேண்டும்...


Barakat Ali
ஏப் 30, 2025 08:18

முன்னேறிய என்னோட மாநிலத்தை விட்டுட்டு தமிழன் அங்கே எப்படிப்போனான் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை