உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜித்தா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=88vd4k07&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பராப்ஜீத் சிங் என்ற நபர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து அமிர்தசரஸ் துணை கமிஷனர் சாக்ஷி சாவ்னி கூறியதாவது: மது அருந்தியவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்றிரவு எங்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து டாக்டர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அப்போது 6 பேர் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.அவர்களை மீட்டு வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். மருத்துவக் குழுக்கள் இன்னும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகிறது. மக்களுக்கு சில அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Narasimhan
மே 13, 2025 17:04

10 லட்சம் கிடைக்குமா?


m.arunachalam
மே 13, 2025 14:19

இதுதான் உள்நாட்டு தீவிரவாதம் .


Kumar Kumzi
மே 13, 2025 13:23

அடேங்கப்பா விடியலின் டாஸ்மாக் மாடல் ஆட்சி பஞ்சாப் வரை விரிவடைந்திருச்சி


V Venkatachalam
மே 13, 2025 13:11

ஸ்வீட் நியூஸ். ஐந்து கட்சி அமாவாசை செ.பா.வுக்கும் குடிகாரர்களை அப்படி சொல்ல கூடாது என்று நமக்கு அட்வைஸ் செய்த முத்துசாமிக்கும் செம ஸ்வீட் நியூஸ். இனிமே எவனும் எங்களை கேள்வி கேக்க முடியுமா?


vee srikanth
மே 13, 2025 11:58

குடித்தவர்களை, பாகிஸ்தான் எல்லையில் விட்டுடுங்கள் - அடி பட்டே சாகட்டும்


vee srikanth
மே 13, 2025 11:57

இலவசத்தை விலை இல்லா பொருள் என்று திராவிட மாடல் சொல்வது போலே, வரி இல்லா சாராயம் என்று சொல்லுவோம்.


அப்பாவி
மே 13, 2025 10:58

விலையைக் குறைங்க


ஆரூர் ரங்
மே 13, 2025 10:40

அவங்க நம்பிக்கைப்படி சிகரட்டுக்கு தடை. ஆனா மது அருந்தலாம்.


subramanian
மே 13, 2025 10:13

திராவிட மாடல் ஆளுங்க எதுக்கு அங்கு போனீங்க ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 13, 2025 14:51

நம்ம முதலமைச்சர் பத்து இலட்சம் அறிவிச்சா இலாபம் தானே. அதுக்கு தான்.


Palanisamy Sekar
மே 13, 2025 10:12

நம்ம திமுக கூட்டணி கட்சியின் ஆட்சிதான் அங்கே நடக்குது. உடனே நம்ம ஸ்டாலினை தொடர்புகொண்டு தலைக்கு பத்துலட்சம் கொடுத்து விஷயத்தை முடிச்சிடுவாங்க. மதுப்பிரியர்கள் விரும்பியதை குடிப்பதை கள்ளச்சாராயம் என்று சொல்லாதீர்கள். அது அரசாங்கம் தயாரிக்க முடியாத சோமபானம் என்று சொல்லுங்களேன்.


சமீபத்திய செய்தி