உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை சாலை விபத்துகளில் 15 பேர் காயம்

சபரிமலை சாலை விபத்துகளில் 15 பேர் காயம்

சபரிமலை:சபரிமலை பாதைகளில் நேற்று நடைபெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.நிலக்கல்- எருமேலி ரோட்டில் நாராணந்தோடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த கேரளா அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் இடித்து நின்றது. பிரேக் செயலிழந்ததை டிரைவர் முன்னதாக தெரிவித்ததால் பஸ்சின் வேகம் குறைந்ததும் ஒவ்வொருவராக வெளியே குதித்து விட்டனர். இதனால் பக்தர்களுக்கு காயம் இல்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வந்த பஸ்சும், பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கி சென்ற பஸ்சும் சாலக்கயம் அருகே நேருக்கு நேர் மோதின. இரண்டு பஸ்களின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர்களில் ஒருவர் கோந்நி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறிது நேரம் சாலக்கயம் -பம்பை ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள். இவர்களுக்கு பம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சபரிமலை சாலை விபத்துகளில் 15 பேர் காயம்

சபரிமலை பாதைகளில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 15 பேர் காயம் அடைந்தனர்.நிலக்கல்- எருமேலி ரோட்டில் நாராணந்தோடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த கேரளா அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மரத்தில் இடித்து நின்றது. பிரேக் செயலிழந்ததை டிரைவர் முன்னதாக தெரிவித்ததால் பஸ்சின் வேகம் குறைந்ததும் ஒவ்வொருவராக வெளியே குதித்து விட்டனர். இதனால் பக்தர்களுக்கு காயம் இல்லை. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வந்த பஸ்சும், பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கி சென்ற பஸ்சும் சாலக்கயம் அருகே நேருக்கு நேர் மோதின. இரண்டு பஸ்களின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர்களில் ஒருவர் கோந்நி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறிது நேரம் சாலக்கயம் -பம்பை ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள். இவர்களுக்கு பம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை