உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: மஹாராஷ்டிராவில் ஆட்சேபனை தெரிவிக்காத கட்சிகள்

15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: மஹாராஷ்டிராவில் ஆட்சேபனை தெரிவிக்காத கட்சிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு 15 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்சிகளிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் கடந்த 2024 நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு மாநிலத்தில் 14.71 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4.09 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.இது குறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்ட வாரியான தரவுகளின்படி, தானேயில் 2.25 லட்சம் புதிய வாக்காளர்களுடன் அதிகபட்ச அதிகரிப்பு பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து புனேவில் 1.82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் தானேயில் 74.55 லட்சமாகவும், புனேவில் 90.32 லட்சமாகவும் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.மும்பை புறநகர் மாவட்டத்தில் 95,630 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் அதன் எண்ணிக்கை 77.81 லட்சமாகவும், மும்பை நகரம் 18,741 பெயர்களைச் சேர்த்து அதன் வாக்காளர் எண்ணிக்கை 25.62 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு அரசியல் கட்சி கூட இது தொடர்பாக எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு மூத்த தேர்தல் அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 19, 2025 07:26

ராகுல் கான் அணுகுண்டை வருகிற 2028 வருடம் தான் வெடிப்பார் ஏனெனில் தேர்தல் 2029 தான். அது வரை காத்திருக்கவும்.


Kasimani Baskaran
செப் 19, 2025 03:59

ராகுல் வாந்தி அங்கு உடனே போனால் ஆட்சேபனை தெரிவித்து இருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை