உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மர் நாட்டில் அடிமையாக சிக்கியுள்ள இந்தியர்கள் 150 பேர்; உறவினர்கள் கண்ணீர்!

மியான்மர் நாட்டில் அடிமையாக சிக்கியுள்ள இந்தியர்கள் 150 பேர்; உறவினர்கள் கண்ணீர்!

ஐதராபாத்: மியான்மர் நாட்டில் சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளிடம் அடிமைகளாக சிக்கி உள்ள 150 பேர், தங்களை மீட்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, தகவல்களை சரிவர விசாரிக்காமல் வெளிநாடு செல்வோர், குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி பலர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களிடம் சிக்கி உள்ளனர். அவர்களை அவ்வப்போது மத்திய அரசு மீட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கம்போடியா, லாவோஸ் நாடுகளில் இருந்து இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.இந்நிலையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள், சீனாவைச் சேர்ந்த சைபர் கிரிமினல்களிடம் அடிமைகளாக சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.இவர்கள் அனைவரும், தாய்லாந்து நாட்டின் எல்லையில் மியான்மர் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.குறிப்பிட்ட இந்த பகுதிகள் அனைத்தும், அரசின் நிர்வாகத்தில் இல்லாதவை; அரசை எதிர்த்து போர் நடத்தும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மியான்மர் அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. அடிமைகளாக சிக்கி உள்ள அனைவரும், இன்டர்நெட் மூலம் இந்தியர்களிடம் பல்வேறு வகையிலான ஆன்லைன் மோசடியில் ஈடுபடும்படி கொடுமைப்படுத்தப் படுகின்றனர்.இது தொடர்பாக, கரீம்நகரின் கரீம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மதுக்கர் ரெட்டி என்பவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்னர் ஆடியோவை அவர் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில், ' நாங்கள் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்கிறோம் என்ற சந்தேகப்பட்டு, மோசடி நபர்கள் எங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எங்களை அறையில் அடைத்து வைத்து உள்ளனர்' எனக்கூறியுள்ளனர். அவர்கள் அனுப்பிய 'லொக்கேஷனும்' தாய்லாந்து எல்லையில் உள்ள மியான்மர் பகுதியைக் காட்டுகிறது.மதுக்கர் ரெட்டியின் தந்தை கூறுகையில்,' எனது மகன் துபாயில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மியான்மருக்கு சென்றார். அங்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அடைத்து வைத்து உள்ளனர். அங்கு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகிறார். அனைத்து இந்தியர்களையும் மீட்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

BHASKARANV.
பிப் 19, 2025 00:36

அடிமைகளாக சிக்கியுள்ள அந்த இந்தியர்களுக்காக கொஞ்சமாவது பரிதாபப்படு.


மாயநாத்
பிப் 18, 2025 16:16

ரெண்டு கோடி வேலல ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டு போனாங்க போலிருக்கு.


jayvee
பிப் 18, 2025 11:59

இது ஒன்றும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது போல வாய் சவடால் இல்லை . இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் அவர்கள் சிக்கியுள்ளனர்..


Narayanan Muthu
பிப் 18, 2025 11:29

உள்ளூர் இந்திய மக்களுக்குத்தான் சொல்லணா துயரம்னு பார்த்தால் வெளிநாட்டுக்கு பிழைக்கப்போனவனுங்களும் நிம்மதியா இல்லை போல.


KavikumarRam
பிப் 18, 2025 14:40

உள்ளூர் தமிழர்களுக்கு தான் சொல்லொணா துயரம். திரவிஷம் தினம் தினம் தமிழர்களை கொன்று கொண்டிருக்கிறது. இதற்கு மியான்மர் எவ்வளவோ பரவாயில்லை.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 11:28

வெளியுறவுத் துறை, வெளியுறவுத் துறை ன்னு ஒரு அமைச்சகம் இருக்கு. அதுக்கு, இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களின் நிலை, பொருளாதாரம், வாழ்வாதாரம் என்று எதுவுமே தெரியாத ஒரு தண்டம் தான் இந்த துறைக்கு அமைச்சரு. அதுவும் இரண்டாவது முறையாகவும். இதை எழுதினால், சென்சார் ல போயிடுச்சு. அமெரிக்கா வே நம்மள பார்த்து பயப்படறான் ன்னு சங்கி பாண்டே சொன்னார். இந்தியா வைப் பார்த்து உலகமே வியக்கிறது ன்னு அண்ணாமலை முதல் எல்லா சங்கிகளும் உருட்டறானுங்க. ஆனால் யதார்த்த நிஜம் இப்படி கேவலமா சோகமா இருக்கு.


Jay
பிப் 18, 2025 12:47

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தூதரகத்தில் பல நாடுகளில் பணிபுரிந்து மிகுந்த அனுபவம் உடையவர். அவர் செயல்பாடுகள் பற்றி அவருடைய பேட்டிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நாலு வார்த்தை சேர்த்து படிக்க முடியாத பேச முடியாத தலைமை இருக்கும் கட்சியிலிருந்து வந்தால் ஜெய்சங்கர் அருமை எப்படி தெரியும்?


sri
பிப் 18, 2025 13:48

வெளிநாட்டில் வேலைக்கு சேர்வதற்கு முன், வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு தொடர்பு கொள்ளவும். வேலை கொடுப்பவர்கள் பற்றிய தகவல்களை சரி பார்க்கவும் என்னும் அறிவிப்பு படி நடக்காதது யார் குற்றம்?


பாமரன்
பிப் 18, 2025 10:57

வெயிட் பண்ணுவோம்... அவனுவளே காலில் விலங்கு போடு கூட்டியாந்தா எதிரி கட்சியினர் ஆளும் மாநிலத்தில் ஆஃப்லோட் பண்ண சொல்வோம்... எங்ககிட்ட ஆக்சன்லாம் எதிர்பார்த்தா டீம்காவை திட்ட வேண்டிவரும்... கப்ர்தார்...


Velayutham rajeswaran
பிப் 18, 2025 11:29

ஏண் 200 இலங்கையில் தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை மீட்டது யார் போர் நடந்த ஈராக்கில் இருந்து செவிலியர்களை மீட்டது யார் கத்தார் நாட்டில் இருந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை மீட்டது யார் பாகிஸ்தான் நாட்டில் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்ட பெண்ணை மீட்டது யார் கள்ளத்தனமாக ஒரு நாட்டில் நுழைந்தால் விலங்கு மாட்டாமல் வெங்காய பஜ்ஜி ஊட்டி விடுவாங்களா


N Sasikumar Yadhav
பிப் 18, 2025 11:30

உண்மையிலேயே நீங்க நன்றிகெட்டத்தனமாக கோபாலபுர கொத்தடிமை மாதிரி பேசுகிறீர் . ரஷ்யா உக்ரைன் போரில் மக்களை மீட்டுக் கொண்டு வந்தது மத்திய மோடிஜி தலைமையிலான அரசு ஆனால் ஸ்டிக்கர் ஒட்டியது உங்கள மாதிரியான மானங்கெட்ட திராவிட மாடல் அரசு


முக்கிய வீடியோ